Banana Snacks Recipes in Tamil
ஹாய் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் வாழைப்பழத்தை வைத்து ஒரு புதுமையான மற்றும் அருமையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்பதை பற்றி தான். பொதுவாக வாழைப்பழத்தை வைத்து பாயாசம், பஞ்சாமிருதம் போன்றவை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த மாதிரி ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டிருக்கமாட்டீர்கள். அது என்ன ஸ்நாக்ஸ் அதனை எப்படி செய்வது என்பதையெல்லாம் இந்த பதிவில் காணலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
வாழைப்பழத்தை வைத்து ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.?
வாழைப்பழத்தை வைத்து ஸ்நாக்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- வாழைப்பழம் – 2
- கோதுமைமாவு – 8 டேபிள் ஸ்பூன்
- அரிசிமாவு – 4 டேபிள் ஸ்பூன்
- உப்பு – 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்திருக்கும் 2 வாழைப்பழங்களின் தோலையும் உரித்த பிறகு அவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 8 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பச்சி மாவு பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
கலந்து வைத்திருக்கும் மாவில் நாம் நறுக்கி வைத்திருந்த வாழைப்பழத்துண்டுகளை போட்டு பிரட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி மாவில் பிரட்டி வைத்திருக்கும் வாழைப்பழத் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது வாழைப்பழ ஸ்நாக்ஸ் ரெடி. இந்த ஸ்நாக்ஸை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
வாழைப்பழம் 1 வாரம் ஆனாலும் வீணாகாமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |