ஒரு முறை இந்த பீட்ருட் சட்னி ட்ரை செய்து பாருங்கள்..!

Beetroot Chutney in Tamil

பீட்ரூட் சட்னி செய்வது எப்படி? – Beetroot Chutney in Tamil

பொதுவாக எல்லார் வீட்டுலயும் தேங்க சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி இது போன்ற சட்னியை மட்டும் தான் ட்ரை பண்ணிருப்பீங்க. இந்த பீட்ரூட் சட்னியை ட்ரை பண்ணிருக்கீங்களா? இல்லை என்றால் உங்களுக்கான பதிவு தான் இது ஆம் நேயர்களே.. இன்றைய பதிவில் பீட்ரூட் சட்னி எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த சட்னியை மட்டும் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவருமே இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

 • பீட்ருட் – ஒன்று
 • தேங்காய் – 1/2 கப்
 • எண்ணெய் – 1 1/2 டீஸ்புன்
 • உளுத்தம் பருப்பு –  1 ஸ்பூன்
 • கடலை பரப்பு – 2 ஸ்பூன்
 • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
 • இஞ்சி – 1/2 துண்டு
 • புளி – சிறிதளவு
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • உப்பு –  தேவையான அளவு
  • தாளிக்க 
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு

இதையும் கிளிக் செய்யுங்கள் 👉 வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?

பீட்ரூட் சட்னி செய்யும் முறை – Beetroot Chutney Recipes in Tamil:

முதலில் பீட்ரூட்டில் உள்ள தோலினை சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் உற்ற வேண்டும் எண்ணெய் சூடேறியதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை செய்து பொன்னிறமாக வதக்கி கொள்ளுங்கள்.

பின் அதனுடன் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

அதன் பின் பொடிதாக நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து வதக்க வேண்டும். பீட்ரூட்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின் அடுப்பை Off செய்து நன்றாக ஆறவிடுங்கள்.

ஆரிய பின் வதக்கிய பொருட்களை மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும், அதனுடன் 1/2 கப் தேங்காய் துருவல், புளி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை செய்துகொள்ளுங்கள்.

இறுதியக சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மைபோல் அரைத்து ஒரு பவுலில் மாற்றி கொள்ளுங்கள். பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து பீட்ருட் சட்னியில் கலந்துவிடுங்கள்.

அவ்வளவு தான் பீட்ருட் சட்னி ரெடி ஒருமுறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி சேர்த்து வதக்கவும்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil