பீட்ரூட் வடை இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

Advertisement

Beetroot Vadai Recipe in Tamil

ஹாய் நண்பர்களே..! பொதுவாக நீங்கள் நிறைய வகையான வடை ரெசிபிகள் சாப்பிட்டு இருப்பீர்கள். மெது வடை, மசால் வடை, வாழைப்பூ வடை, தயிர் வடை, பருப்பு வடை, உளுந்து வடை, பூசணி வடை இதுபோன்ற எல்லா வடைகளையும் சாப்பிட்டு இருப்பீர்கள். ஒரே மாதிரியான வடைகள் சாப்பிட்டு உங்களுங்கு அலுத்துப்போய்விட்டது என்றால் இன்றைய பதிவில் கொடுக்கப்பட்டுள்ள புது வகையான வடை ரெசிபிகளை தெரிந்து கொண்டு வீட்டில் செய்து அசத்துங்கள். அப்படி என்ன வடை என்ற நினைக்கிறீர்களா பீட்ரூட் வடை தான். பீட்ரூட்டை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இப்படி ஒருமுறை பீட்ரூட் வடை செய்து கொடுங்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். மேலும் பீட்ரூட் வடை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு இன்றைய சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ நாவிற்கு சுவையூட்டும் காலிஃபிளவர் வடை

பீட்ரூட் வடை செய்ய தேவையான பொருட்கள்:

  • கடலை பருப்பு- 3/4 கப் 
  • பீட்ரூட்- 200 கிராம் 
  • பச்சை மிளகாய்- 2
  • வெங்காயம்- 1
  • பெருங்காயத்தூள்- 1/4 ஸ்பூன் 
  • சோம்பு- 1 ஸ்பூன் 
  • அரிசி மாவு- 3 ஸ்பூன் 
  • உப்பு- தேவையான அளவு 
  • எண்ணெய்- தேவையான அளவு 
  • கருவேப்பிலை- சிறிதளவு 

பீட்ரூட் வடை செய்வது எப்படி:

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் எடுத்து வைத்துள்ள கடலை பருப்பை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். கடலை பருப்பு நன்றாக ஊறிய பிறகு தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக பீட்ரூட்டை எடுத்துக்கொண்டு அதன் மேல் உள்ள தோலினை நீக்கிய பிறகு நைசாக துருவி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து விடுங்கள். அதன் பிறகு பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது அரைத்து வைத்துள்ள கடலை பருப்புடன் துருவிய பீட்ரூட் மற்றும் எடுத்து வைத்துள்ள சோம்பு, பெருங்காயத்தூள், அரிசி மாவு, நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் இவை அனைத்தையும் அதில் போட்டு நன்றாக உங்களுடைய கைகளால் பிசைந்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு பிசைந்து வைத்துள்ள மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் அப்படியே பாத்திரத்தில் வைத்து விடுங்கள்.

 ஸ்டேப்- 5

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி விடுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு வழக்கமாக வடை செய்வது போல் உங்களுடைய கைகளால் செய்து எண்ணெயில் போட்டு வடை பொன் நிறமாக வந்தவுடன் எடுத்து விடுங்கள். நீங்கள் எதிர்பார்த்த சுவையான பீட்ரூட் வடை தயார்.

இது மாதிரி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மழை காலங்களில் சுவையான பீட்ரூட் வடை செய்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

உடலுக்கு ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement