பிரியாணி கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி.?
பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. பிரியாணியை மூன்று வேலையும் சாப்பிட கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மீன் பிரியாணி, காளான் பிரியாணி, வெஜிடேபுள் பிரியாணி போன்ற பிரியாணி தான் சாப்பிட்ருப்போம். இதற்கெல்லாம் ரைத்த வைத்து தான் சாப்பிடுவோம். கொஞ்சம் வித்தியாசமாக பிரியாணி கத்திரிக்காய் கிரேவி வைத்து சாப்பிடலாம். வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
பிரியாணி கத்திரிக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
- நிலக்கடலை – 2 தேக்கரண்டி
- வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
- வெள்ளை எல் – 1 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் – 5 தேக்கரண்டி
- கத்தரிக்காய் -4
- கடுகு- 1/2 தேக்கரண்டி
- மிளகு – 1/4 தேக்கரண்டி
- சீரகம் – 1/4 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
- வெங்காயம் -1
- தக்காளி -1
- பச்சை மிளகாய்-3
- இஞ்சி பூண்டு பேஸ்ட் -1
- மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
- மல்லி தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- புளி – சிறிதளவு
- தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை:
பொடி செய்வது:
அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி நிலக்கடலை, 1/2 தேக்கரண்டி வெந்தயம். 1 1/2 தேக்கரண்டி வெள்ளை எல் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். வதக்கிய பொருட்கள் ஆறியதும் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.
கத்திரிக்காய் வதக்குவது:
அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, கத்திரிக்காய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
மசாலா சேர்ப்பது:
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும், மிளகு, சீரகம், கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லி தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பிரியாணி கத்திரிக்காய் கிரேவி ரெடி:
பின் அதனுடன் நறுக்கிய தக்காளி 1 சேர்த்து சிவதாகவும். பின் அதில் வதக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து உப்பை தேவையான அளவு சேர்த்து வதக்கவும். பின் அதில் புளி தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து அரைத்து வைத்த பொடியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இறக்கி விடவும்.
வீட்டிலேயே பிரியாணி மசாலா செய்யலாம் அதற்கு தேவையான பொருட்கள்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |