வீட்டிலே ஐந்தே நிமிடத்தில் பிரெட் அல்வா செய்வது எப்படி..! Bread Halwa Seivathu Eppadi..!

Advertisement

சுவையான பிரெட் அல்வா எப்படி செய்ய வேண்டும்..! Bread Halwa Tamil Recipe..!

ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வீட்டில் இருந்தே சுவையான பிரெட் அல்வா (Bread Halwa Recipe At Home) எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். அல்வா என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபி வகையை சேர்ந்தது. அதில் பிரெட்டில் அல்வா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!

newஐந்தே நிமிடத்தில் சுவையான Bread Chili Recipe..!

பிரெட் அல்வா செய்ய – தேவையான பொருட்கள்:

  1. பிரெட் – 5 துண்டுகள் 
  2. நெய் – 1 டேபிள் ஸ்பூன் 
  3. முந்திரி பருப்பு – 6
  4. தண்ணீர் – 1 கப் 
  5. சர்க்கரை – 1/4 கப் 
  6. ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை 

ஐந்தே நிமிடத்தில் பிரெட் அல்வா செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:

முதலில் கடாயில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் எடுத்துக்கொள்ளவும். அடுத்து நெய்யுடன் 6 முந்திரி பருப்பை பழுப்பு நிறம் வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து நெய் எதும் சேர்க்காமல் அதே கடாயில் 5 துண்டு பிரெட்டை நன்றாக வறுத்து கொள்ளவும்.

பிரெட் அல்வா எப்படி செய்வது செய்முறை விளக்கம் 2:

தேவைப்பட்டால் அடுத்து இந்த ப்ரெட்டின் மேல் 1/2 டீஸ்பூன் நெய் சேர்த்து ஃப்ரை செய்துக்கொள்ளலாம். இதுபோன்று அனைத்து பிரெட்டையும் நெயில் வறுத்து தட்டில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிரெட் அல்வா செய்ய செய்முறை விளக்கம் 3:

அடுத்ததாக வறுத்த அனைத்து பிரெட்டையும் சிறிய சிறிய துண்டுகளாக பிரித்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு இரும்பு கடாயில் 1 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். தண்ணீரில் 1/4 கப் அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். சர்க்கரை சேர்த்த பிறகு 1 சிட்டிகை அளவு ஏலக்காய் தூளை சேர்க்கவும்.

newசுவையான ட்ரை ஃப்ரூட் ஹல்வா செய்முறை..!

பிரெட் அல்வா எப்படி செய்ய வேண்டும் செய்முறை விளக்கம் 4:

சர்க்கரை தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு பிரித்து வைத்த பிரெட் துண்டுகளை சேர்த்து பிரெட் ஊறிவரும் அளவிற்கு நன்றாக கிளறிவிட வேண்டும். அடுத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து 1 நிமிடம் கிளற வேண்டும்.

பிரெட் அல்வா செய்வது எப்படி தமிழில் செய்முறை விளக்கம் 5:

அடுத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறிவிட வேண்டும். இப்போது நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை கடாயில் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அவ்ளோதாங்க இந்த பிரெட் அல்வா ரெசிபி. கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க..!

newகோதுமை மாவு இருக்கா சுவையான புட்டு ரெசிபி ..! Godhumai Sweet Puttu Recipe..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement