வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

Updated On: January 5, 2023 1:29 PM
Follow Us:
Bread Spring Roll Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Bread Spring Roll Recipe in Tamil

இன்றைய சமையல் குறிப்பு பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அப்படி நினைப்பவர்களுக்காக  தான் இந்த பதிவு. வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

பிரட் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி..? 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்: 

  1. பெரிய வெங்காயம் – 2
  2. உருளைக்கிழங்கு –
  3. மைதா மாவு – 1/4 கப்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  6. மல்லித்தூள் – 1 ஸ்பூன்
  7. கரமசாலா – 1/2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் – சிறிதளவு
  9. பச்சை பட்டாணி – 1/2  கப்
  10. கொத்தமல்லி – சிறிதளவு
  11. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  12. பிரட் – தேவையான அளவு
  13. பிரட் தூள் – தேவையான அளவு
  14. உப்பு – தேவையான அளவு
  15. எண்ணெய் – தேவையான அளவு
கல்கத்தா ஸ்பெஷல் அண்டா ரோல் செய்வது எப்படி..?

பிரட் ஸ்ப்ரிங் ரோல் செய்முறை:

Bread Spring

செய்முறை -1 

முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

செய்முறை -2 

வெங்காயம் வதங்கியதும் அதில் 1 ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரமசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

செய்முறை -3 

மசாலா நன்றாக வதங்கியதும் அதில் பச்சை பட்டாணி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வரை மூடிபோட்டு வேகவைக்க வேண்டும்.

செய்முறை -4 

பிரட் ஸ்ப்ரிங் ரோல்

உருளைக்கிழங்கை வேகவைத்து மாவு போல மசித்து எடுத்து கொள்ளுங்கள். மசாலா வெந்ததும் அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு சிறிதளவு கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

செய்முறை -5 

மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை நன்றாக கிண்ட வேண்டும். உருளைக்கிழங்கும் மசாலாவும் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பிரட் சில்லி செய்வது எப்படி

செய்முறை -6 

பின் ஒரு கிண்ணத்தில் மைதா மாவை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

செய்முறை -7 

பிறகு பிரட் எடுத்து கொள்ளுங்கள். பிரட்டின் நான்கு ஓரங்களையும் நறுக்கி கொள்ளுங்கள். பின் ஒவ்வொரு பிரட்டையும் சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து கொள்ளுங்கள்.

செய்முறை -8 

பின் அதில் நாம் செய்து வைத்துள்ள மசாலாவை பிரட்டில் வைத்து உருட்டி கொள்ளுங்கள். பின் மைதா மாவு கலந்து வைத்துள்ள தண்ணீரை தொட்டு பிராட்டின் ஓரங்களை அமுக்கி கொள்ள வேண்டும்.

செய்முறை -9 

அடுத்து மசாலா வைத்து உருட்டி வைத்துள்ள பிரட்டை மைதா மாவு கலந்து வைத்துள்ள தண்ணீரில் நனைத்து எடுத்து, பின் பிரட் தூளில் போட்டு புரட்டி எடுத்து கொள்ளுங்கள்.

செய்முறை -10 

பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள பிரட் ரோலை போட்டு பொறிக்க வேண்டும். பிரட் ரோல் பொன்னிறமாக வந்ததும் எண்ணெய்யில் இருந்து எடுத்து விட வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய பிரட் ஸ்ப்ரிங் ரோல் ரெடி..! நீங்களும் இந்த பிரட் ஸ்ப்ரிங் ரோல் ரெசிபியை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

5 நிமிடத்தில் காலை உணவு ரெடி!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now