அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய கேரட் கீர் இப்படி செஞ்சி பாருங்க..!

Carrot Kheer Recipe in Tamil

Carrot Kheer Recipe in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் மிகவும் சுவையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய கேரட் கீர் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கேரட் கீர் கடைகளில் சென்று வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். வாங்க நண்பர்களே மிகவும் சுவையான கேரட் கீர் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..!முறையில்

இதையும் பாருங்கள் –> கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கேரட் கீர் செய்வது எப்படி..? 

கேரட் கீர் செய்வது எப்படி

கேரட் கீர் – தேவையான பொருட்கள்:

  1. கேரட் – 3
  2. பால் – 1 லிட்டர்
  3. சர்க்கரை – 1/2 கப்
  4. ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
  5. முந்திரி, பாதாம் – தேவையான அளவு
  6. குங்கும பூ – சிறிதளவு

கேரட் கீர் செய்முறை: 

செய்முறை -1 

முதலில் கேரட்டை 2 பாதியாக அரிந்து, அதை தண்ணீரில் வேகவைக்க வேண்டும்.

செய்முறை -2

பின் கேரட் நன்கு வெந்தவுடன் அதை ஆறவிட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு மை போல அரைத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -3

பிறகு ஒரு கடாயில் 1 லிட்டர் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பால் நன்றாக கொதித்த உடன் நாம் அரைத்து வைத்துள்ள கேரட்டை அதில் போட வேண்டும்.

செய்முறை -4

பாலும் கேரட்டும் நன்றாக கலந்து கொதித்த பின் அதில் அரை கப் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை உங்களுக்கு பிடித்த அளவிற்கு சேர்த்து கொள்ளலாம்.

செய்முறை -5

பின் அதில் வாசனைக்காக 1 ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து 10 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

செய்முறை -6 

பின் முந்திரி பருப்பு, பாதாம் பொடிப் பொடியாக நறுக்கி அதில் போட வேண்டும். பிறகு அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கொள்ள வேண்டும். பின் அடுப்பை குறைத்து வைத்து 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே..! அனைவருக்கும் பிடித்த கேரட் கீர் தயார்..! இதை நீங்கள் உங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம்..!

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்