Chana Masala Recipe in Tamil
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் மிகவும் சுவையான சென்னா மசாலா செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். சப்பாத்தி, பூரி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி பூரிக்கு ஏற்ற சென்னா மசாலா சுலபமான முறையில் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
அசைவ சாப்பாட்டினை மிஞ்சும் அளவிற்கு சுவையான பன்னீர் மசாலா கிரேவி இப்படி செய்து பாருங்கள்…! |
சென்னா மசாலா செய்வது எப்படி..?
மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
- வெள்ளை கொண்டை கடலை – 200 கிராம்
- வெங்காயம் – 3
- தக்காளி – 2
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு பற்கள் – 5
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- சீரகத்தூள் – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- கரமசாலா – 1 ஸ்பூன்
- மல்லித்தூள் – 2 ஸ்பூன்
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- பட்டை, கிராம்பு – சிறிதளவு
- ஏலக்காய் – 3
- சீரகம் – 1 ஸ்பூன்
- பச்சை மிளாகாய் – 3
- கொத்தமல்லி – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
சென்னா மசாலா செய்முறை:
செய்முறை -1
முதலில் 200 கிராம் வெள்ளை கொண்டை கடலையை 8 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும். பின் அதை குக்கரில் வைத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
குக்கரில் 4 அல்லது 5 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இரக்க வேண்டும்.
செய்முறை -2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் நம் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
செய்முறை -3
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் இஞ்சி, பூண்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் கரமசாலா இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
செய்முறை -4
மசாலா நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் அடுப்பை குறைத்து வைத்து, 10 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.
செய்முறை -5
பின் அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிட வேண்டும். மசாலா ஆறியவுடன் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
செய்முறை -6
அடுத்து ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவில் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
செய்முறை -7
பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் கொண்டை கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் வரை வேகவிட வேண்டும்.
செய்முறை -8
மசாலா நன்றாக வெந்தவுடன் அதில் சிறிதளவு கொத்தமல்லி அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து இரக்க வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே..! பூரிக்கு ஏற்ற சென்னா மசாலா தயார்..! இந்த மாதிரி சென்னா மசாலா நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்..!
இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |