தீபாவளி ஸ்பெஷல் ருசியான சந்திரகலா ஸ்வீட் செய்வது எப்படி?

Chandrakala Sweet Recipe in Tamil

சந்திரகலா ஸ்வீட் செய்முறை | Chandrakala Sweet Recipe in Tamil

Chandrakala Sweet: தித்திக்கும் இனிய தீபாவளியை கொண்டாடுவதற்கு வீட்டில் நமக்கு பிடித்த ஸ்வீட்களை செய்து மகிழ்வோம். அதுவும் இனிப்பு பலகாரம் என்றால் நாவில் எச்சில் ஊரும். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சந்திரகலா ஸ்வீட் வீட்டிலேயே பேக்கரி ஸ்டைலில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த பலகாரத்தை செய்து முடிப்பதற்கு ரொம்ப நேரம் ஆகாது 20 நிமிடத்தில் ஈஸியாக செய்து விடலாம். இப்போது சந்திரகலா ஸ்வீட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

சந்திரகலா ஸ்வீட்

 1. மைதா – 250 கிராம்
 2. சக்கரை – அரை கிலோ
 3. நெய் – 75 கிராம்
 4. பிளைன் கோவா (Plain Kova) – 150 கிராம்
 5. சாஃப்ரான் (Saffron) – 1 கிராம்
 6. எண்ணெய் – தேவையான அளவு
 7. ஏலக்காய் பவுடர் (Cardamom Powder) – கால் டேபிள் ஸ்பூன்
 8. பாதம் – 4 நம்பர்
 9. முந்திரி – 4 நம்பர்
 10. பிஸ்தா – 4 நம்பர்
 11. கேசரி கலர் பவுடர் – அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை – chandrakala sweet recipe:

 • முதலில் சுகர் Syrup தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் அரை கிலோ சர்க்கரை போட்டு அதில் 200 ml தண்ணீர் ஊற்றி சிறிதளவு பால் ஊற்றி வேக வைக்க வேண்டும். பின் கொதிக்கும் போது அதன் மேலே வரும் நுரை போன்ற பகுதியை வடிகட்ட வேண்டும்.
 • ஒரு கையில் ஒட்டும் (கம்பி பதம்) அளவிற்கு சுகர் சிரப் வந்தவுடன் அடுப்பை அனைத்து இறக்கி விடவும்.

ஸ்டேப்: 2 – Chandrakala Sweet Recipe in Tamil

 • பின்னர் 250 கிராம் மைதாவை மேசையில் கொட்டி அதன் நடுப்பகுதியில் குழி போல பரப்பி கொள்ளவும்.
 • பின் மைதாவின் நடுப்பகுதியில் 75 கிராம் நெய்யை ஊற்றி கொள்ளவும். பின் மைதாவையும் நெய்யையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து உதிரியாக வரும் அளவிற்கு பிசைந்து கொள்ளவும். உதிரியாக இருக்கும் நிலையில் தண்ணீரை மேலோட்டமாக தெளிக்க வேண்டும். மாவை அழுத்தமாக பிசையாமல் soft ஆக பிசைந்து உருட்டி கொள்ளவும்.

Chandrakala Sweet Recipe in Tamil – ஸ்டேப்: 3

 • பின்னர் உள்ளே வைப்பதற்கான Stuffing ரெடி பண்ண வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் பிளைன் கோவா 150 கிராம், சர்க்கரை பவுடர் 1 டேபிள் ஸ்பூன், பொடிதாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா (4) கலவைகள், சாஃப்ரான் 1 கிராம், ஏலக்காய் பவுடர் கால் டேபிள் ஸ்பூன், கொஞ்சம் மைதா போன்றவற்றை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். (பிளைன் கோவா இல்லையெனில் ஸ்வீட் கோவா பயன்படுத்தலாம் ஸ்வீட் கோவா பயன்படுத்தும் போது சர்க்கரை சேர்க்க வேண்டாம்)
 • இப்பொழுது சந்திரகலா உள்ளே வைப்பதற்கு ரெடி செய்த Stuffing-ஐ நீளவாக்கில் சிறிதாக கட் பண்ணி உருட்டி கொள்ளவும்.

ஸ்டேப்: 4

 • பின்னர் நெய் மற்றும் மைதா சேர்த்து உருட்டி வைத்த மாவை 10 நிமிடம் கழித்து தங்களுக்கு எந்த அளவில் வேண்டுமோ அந்த அளவிற்கு சப்பாத்தி உருட்டுவது போல Thin-ஆக உருட்டி அதன் மேற் பகுதியில் சிறிதளவு தண்ணீர் தடவி கொள்ளவும். பின் ரெடி செய்த Stuffing-ஐ அதன் உள்ளே வைத்து சோமாசா மடிப்பது போல நன்றாக மடித்து கொள்ளவும்.

சந்திரகலா ஸ்வீட்

 • பின் சந்திரகலாவின் கார்னர் பகுதியில் Fold செய்து Press பண்ணவும். அப்பொழுதுதான் சந்திரகலா ஸ்வீட் பேக்கரியில் இருப்பது போல இருக்கும். இதே போல எல்லா மாவையும் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 5 – Chandrakala Sweet Recipe in Tamil:

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி Medium Flame -ல் வைத்து எண்ணெய் சூடான பிறகு செய்து வைத்திருக்கும் சந்திரக்கலாவை எண்ணெயில் போட வேண்டும். எண்ணெயில் போட்ட பின் அது வெந்து மேலே வரும் சந்திரக்கலாவை கரண்டியில் போட்டு கிண்ட கூடாது சற்று அதனை லேசாக Rotate செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 6

கோல்டன் பிரவுன் கலர் வந்தவுடன் அடுப்பை அனைத்து விடவும். பின்னர் செய்து வைத்த சுகர் சிரப்புடன் அரை டேபிள் ஸ்பூன் கேசரி கலர் பவுடர் சேர்க்க வேண்டும். பின் அந்த சுகர் சிரப்பில் கோல்டன் பிரவுன் கலர் வந்த சந்திரக்கலாவை போட்டு 10-15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். (கேசரி பவுடர் வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதை பயன்படுத்த வேண்டாம்)

இப்பொழுது சுவையான சந்திரகலா ஸ்வீட் தயார்!!

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி?
தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil