சிக்கன் 65 செய்வது எப்படி | Chicken 65 Recipe in Tamil

Advertisement

சிக்கன் 65 எப்படி செய்வது | Chicken 65 Recipe Tamil

How To Make Chicken 65: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சூடான சுவையான மொறுமொறுப்பான சிக்கன் 65 செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சிக்கன் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை யாருக்குதான் பிடிக்காது. அதுவும் சிக்கனில் 65 செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். இதை ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். வாங்க வீட்டிலேயே Chicken 65 செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

Chicken 65 in Tamil – தேவையான பொருட்கள்:

சிக்கன் 65 செய்வது எப்படி

  1. எலும்பு நீக்கிய கறி – 250 கிராம் (தேவையான அளவு)
  2. உப்பு – தேவையான அளவு
  3. காஷ்மீரி தூள் – 1 டீஸ்பூன்
  4. மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  5. கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது (Paste) – 2 டீஸ்பூன்
  7. சோள மாவு (Corn Flour) – 2 டீஸ்பூன்
  8. அரிசி மாவு (Rice Flour) – 1 டீஸ்பூன்
  9. லெமன் ஜூஸ் – 2 டீஸ்பூன்
  10. முட்டை – 1
  11. எண்ணெய் – தேவையான அளவு
  12. சீரகம் – 1/2 டீஸ்பூன்
  13. பூண்டு – 1 டீஸ்பூன்  (நறுக்கியது)
  14. பச்சைமிளகாய் – 2, 3 (கீறியது)
  15. சிவப்பு மிளகாய் – 2
  16. கருவேப்பிலை – 8-10
  17. Red Chilly Paste – 1 டேபிள் ஸ்பூன்
  18. தண்ணீர் – தேவையான அளவு

Chicken 65 Seivathu Eppadi – செய்முறை:

  • முதலில் எலும்பு நீக்கிய கறியை 250 கிராம் (தேவையான அளவு) எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

சிக்கன் 65 எப்படி செய்வது – ஸ்டேப்: 1

  • பின் அவற்றில் தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் காஷ்மீரி தூள், 1 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2 டீஸ்பூன் சோள மாவு (Corn Flour), 1 டீஸ்பூன் அரிசி மாவு (Rice Flour), 2 டீஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக Mix செய்யவும்.

Chicken 65 Recipe in Tamil – ஸ்டேப்: 2

  • பிறகு ஒரு முட்டையை எடுத்து ஒரு பௌலில் போட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும். கறியில் அந்த முட்டையை ஊற்றி நன்றாக Mix செய்யவும். மிக்ஸ் செய்ததை ஒரு 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

சிக்கன் 65 | Chicken 65 Recipe Tamil – ஸ்டேப்: 3

  • பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு ஊறவைத்த சிக்கனை ஒவ்வொன்றாக 2-3 நிமிடம் Medium Flame-ல் வைத்து சிக்கனை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
சிக்கன் லாலிபாப் செய்முறை விளக்கம்

Chicken 65 Seivathu Eppadi – ஸ்டேப்: 4

  • பின் ஒரு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். சீரகம் பொரிந்தவுடன் 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

How To Make Chicken 65- ஸ்டேப்: 5

  • பிறகு அதில் 2-3 கீறிய பச்சை மிளகாய், 2 சிவப்பு மிளகாய், 8-10 கருவேப்பிலை, 1 டேபிள் ஸ்பூன் Red Chilly Paste சேர்த்து வதக்கி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

சிக்கன் 65 செய்வது எப்படி  – ஸ்டேப்: 6

  • அதன் பிறகு பொரித்து வைத்த சிக்கனை வெந்து கொண்டிருக்கும் அந்த கிரேவியில் சேர்த்து டாஸ் பண்ண வேண்டும். சிக்கன் அந்த கிரேவியில் சேரும் அளவிற்கு நன்றாக Mix செய்ய வேண்டும். ஆனால் அதிகமாக வேக வைக்க வேண்டாம். சிக்கன் கிரேவியில் சேர்ந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.
  • இப்பொழுது அனைவருக்கும் பிடித்த சூடான, மொறுமொறுப்பான சிக்கன் 65 தயார்.
பெப்பர் சிக்கன் செய்யும் முறை
டிராகன் சிக்கன் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement