சிக்கன் சால்னா இப்படி ஒரு முறை செஞ்சு இட்லி, தோசைக்கு சாப்பிட்டா போதும் டேஸ்ட் மறக்கவே முடியாது..!

Advertisement

சிக்கன் சால்னா ரெசிபி | Chicken Salna Recipe in Tamil

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் இரண்டு வகையான சாப்பாடு தான் உள்ளது. ஒன்று சைவ சாப்பாடு மற்றொன்று அசைவ சாப்பாடு. இதில் பெரும்பாலும் நம்முடைய வீட்டில் இட்லி, தோசை, சாம்பார், புளிக்குழம்பு என சைவ சாப்பாடாக தான் இருக்கிறது. சிலருக்கு இத்தகைய சைவ சாப்பாட்டினை பார்த்தாலே பிடிக்காது. அதனால் கடைக்கு சென்று பிடித்த மாதிரியான அசைவ சாப்பாட்டினை சாப்பிடுவார்கள். அந்த வகையில் சிலருக்கு சிக்கன் கிரேவி, சிக்கன் குருமா, சிக்கன் குழம்பு, சிக்கன் சால்னா என இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அதனை வீட்டிலும் செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள். ஆனால் அத்தகைய சிக்கன் சால்னாவை நம்முடைய வீட்டினை செய்யும் போது அதே சுவை வராது. அதனால் இன்று சிக்கன் சால்னா ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Parotta Chicken Salna Recipe:

 parotta chicken salna recipe in tamil

இன்று நாம் செய்ய போகும் சிக்கன் சால்னாவை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பரோட்டா என அனைத்திற்கும் சைடிஷாக தொட்டு சாப்பிடலாம். சரி வாங்க இதனை எப்படி செய்வது என்று விரிவாக செய்முறை வடிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன்- 1/2 கிலோ 
  • பிரியாணி இலை- 2
  • பட்டை- 2
  • சோம்பு- 1 ஸ்பூன் 
  • பெரிய வெங்காயம்- 2
  • தக்காளி- 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன் 
  • பச்சை மிளகாய்- 3
  • மல்லித்தூள்- 1 ஸ்பூன் 
  • மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன் 
  • மிளகாய் தூள்- 1 ஸ்பூன்  
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- தேவையான அளவு

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:

  • எண்ணெய்- தேவையான அளவு 
  • பட்டை- 1
  • ஏலக்காய்- 3
  • கிராம்பு- 3
  • மிளகு- 3 ஸ்பூன் 
  • சோம்பு- 2 ஸ்பூன் 
  • சீரகம்- 1 ஸ்பூன் 
  • கச கச- 1 ஸ்பூன் 
  • தேங்காய்- 1 கப் 

இதையும் படியுங்கள்⇒ வீடே மணக்க கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா செய்ய தெரியுமா.. 

சிக்கன் சால்னா செய்வது எப்படி.?

சிக்கன் சால்னா செய்வது எப்படி

ஸ்டேப்- 1

முதலில் வாங்கி வைத்துள்ள 1/2 கிலோ சிக்கனை சுத்தம் செய்து கொண்டு. அதன் பிறகு அதில் உள்ள எலும்பு மற்றும் கறியினை சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள்.

மேலும் இந்த சால்னாவை செய்வதற்கு சிக்கன் எலும்பு அதிகளவு எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது எடுத்துவைத்துள்ள பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றையினை நறுக்கி வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3 

அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வறுத்து அரைக்க எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தினையும் சேர்த்து பொன் நிறமாக வறுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு கடைசியாக தேங்காயினை வறுத்து வைத்துள்ள பொருளுடன் சேர்த்து மீண்டும் 10 நிமிடம் வறுத்து அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு வறுத்த வைத்துள்ள பொருட்களை ஆற வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

சிறிது நேரம் கழித்த பிறகு ஆற வைத்துள்ள பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக மசாலா போல அரைத்து கொள்ளுங்கள். இப்போது சிக்கன் சால்னா செய்ய மசாலா தயார் ஆகிவிட்டது.

ஸ்டேப்- 6

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் எடுத்துவைத்துள்ள பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றையினை நன்றாக 10 நிமிடம் வரை வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 7 

10 நிமிடம் கழித்த பிறகு கடையில் உள்ள பொருளுடன் எடுத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் ஆகியவற்றையினை சேர்த்து மீண்டும் ஒரு 15 நிமிடம் வதக்கி விடுங்கள்.

ஸ்டேப்- 8 

அதற்கு பிறகு 15 நிமிடம் கழித்த பிறகு கடைசியாக அலசி வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடுங்கள். சிக்கன் வெந்த பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் போதும் சுவையான சிக்கன் சால்னா தயார்.

இதையும் படியுங்கள்⇒ சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்!!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement