Chilli Parotta Recipe in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் பரோட்டா தான். அதிலும் சில்லி பரோட்டா என்றால் சொல்லவா வேண்டும் அதனை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.அதனால் அந்த சில்லி பரோட்டாவை வீட்டிலேயே அதுவும் 1 கப் கோதுமை மாவை வைத்து எவ்வாறு செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Chilli Parotta in Tamil:
முதலில் இந்த சில்லி பரோட்டா செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கோதுமை மாவு – 1 கப்
- வெங்காயம் – 2
- பச்சைமிளகாய் – 2
- குடைமிளகாய் – 1
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- மிளகாய்தூள் – 3/4 டீஸ்பூன்
- தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன்
- கரம்மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
- சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
- சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
- சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
- தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பிசைந்து வைத்துள்ள மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி அதனை சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நறுக்கிய வைத்துள்ள கோதுமை மாவு துண்டுகளை போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பின்னர் அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் தேவையான அளவு கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 வெங்காயம், 2 பச்சை மிளகாய் மற்றும் 1 குடைமிளகாய் ஆகியவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
இவையெல்லாம் நன்கு வதங்கியவுடன் இதனுடன் 3/4 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் தனியாத்தூள்,1/2 டீஸ்பூன் கரம்மசாலா தூள், 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள், 1/4 டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 6
அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அதனுடன் 1 டீஸ்பூன் சோயா சாஸ், 1 டீஸ்பூன் சில்லி சாஸ் மற்றும் 2 டீஸ்பூன் தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 7
பின்னர் அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அதனுடன் நாம் முன்னரே பொறித்து வைத்திருந்த கோதுமை மாவு துண்டுகளை போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். அந்த கோதுமை மாவு துண்டுகளுடன் மசாலா நன்கு கலந்தவுடன் அதனை எடுத்து அனைவருக்கும் பரிமாறலாம்.
இந்த சில்லி பரோட்டாவை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இந்த சில்லி சிக்கனை செய்துகொடுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |