கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சுகர் குக்கீஸ் செய்யும் முறை (Christmas Special Sweets)..!

Advertisement

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சுகர் குக்கீஸ் செய்யும் முறை (Christmas Special Sweets)..!

Christmas Special Sweets:- கிறிஸ்துமஸ் வருவதற்கு இன்னும் குறைந்த நாட்கள் தான் உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் அன்று அனைவரும் விரும்பி செய்யக்கூடிய மிகவும் சுவையான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய christmas special sweets செய்வது எப்படி என்று இங்கு நாம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..!

 

Christmas Special Sweets செய்ய தேவையான பொருட்கள்:-

  1. மைதா மாவு – 1 & 1/2 கப்
  2. சோள மாவு – 1/2 மேஜைக்கரண்டி
  3. பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
  4. உப்பு – 1/4 ஸ்பூன்
  5. வெண்ணெய் – 1/2 கப்
  6. பொடி செய்த சர்க்கரை – 1/2 to 3/4 கப்
  7. வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
  8. காய்ச்சிய பால் – 3-4 மேஜைக்கரண்டி
  9. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  10. ஃபுட் கலர்
Christmas Cookies- Microwave Oven இல்லாமல் சுலபமாக செய்யலாம்..!

செய்முறை:-

Christmas Special Sweets – sugar cookie recipe step: 1

முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும், அவற்றில் 1 & 1/2 கப் மைதா மாவு, 1/2 மேஜைக்கரண்டி சோளமாவு, ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு 1/4 ஸ்பூன் ஆகியவற்றை சல்லடையில் சலித்து எடுத்து கொள்ளவும்.

பின் மற்றொரு பவுலில் 1/2 கப் வெண்ணெய், 1/2 to 3/4 கப் பொடி செய்த சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

Christmas Special Sweets – sugar cookie recipe step: 2

பிறகு இதனுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் கலந்து வைத்துள்ள மைதா மாவினை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்பு இந்த கலவையுடன் 3-4 மேஜைக்கரண்டி காய்ச்சிய பாலினை சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து விடவேண்டும்.

Christmas Special Sweets -sugar cookie recipe step: 3

இவ்வாறு பிசைந்த மாவினை cling film wrap-யில் வைத்து சுற்றவும், பின் இந்த மாவை 3-4 மணி நேரம் Freezer-யில் வைக்க வேண்டும்.

பின் பிரிட்ஜில் இருந்து மாவை எடுத்து விடவும், அதன் பிறகு ஒரு நீளமான பலகையில் சிறிதளவு மைதா மாவு தூவி, பிசைந்த மாவினை அவற்றில் வைத்து சப்பாத்தி கட்டையால் அந்த மாவை தேய்த்து விடவும்.

Christmas Special Sweets – sugar cookie recipe step: 4

பிறகு தங்களுக்கு பிடித்த ஷேப்பில் மாவினை கட் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு ட்ரேவை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் கட் செய்த மாவினை வைத்து பின் ட்ரேவினை cling film wrap-றால் மூடவும். மீண்டும் 10-15 நிமிடங்கள் Freezer-யில் வைத்து எடுக்க வேண்டும்.

பின்பு 180 preheat செய்த அவனில் வைத்து 8-10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும்.

பின்பு மீண்டும் ஒரு பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் பொடி செய்து வைத்துள்ள சர்க்கரையை சேர்க்கவேண்டும், பின் ஒரு ஸ்பூன் சோளமாவு, காய்ச்சிய பால் 1-2 மேசைக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

Christmas Special Sweets – sugar cookie recipe step: 5

பின் அவற்றில் தங்களுக்கு பிடித்த ஃபுட் கலர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

இறுதியாக அவனில் வேகவைத்த பிஸ்கட்டை கலந்து வைத்துள்ள கலவையில் டிப் செய்து சிறிது நேரம் பிரிட்ஜில் உளரவிடவும். அவ்வளவு தான் சூப்பரான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சுகர் குக்கீஸ் தயார்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement