தேங்காய் பால் புட்டிங்
நண்பர்கள் அனைவர்க்கும் அன்பான வணக்கங்கள்..! இன்று நம்முடைய பொதுநலம்.காம் பதிவில் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரும் மற்றும் மிகவும் சுவையான தேங்காய்பால் புட்டிங் செய்வது எப்படி என்றுதான் பார்க்கப்போகிறோம். நாம் அனைவரும் தேங்காய்ப்பாலை சாதாரணமாக சாப்பிட்டிருப்போம் ஆனால் இதுபோல் புட்டிங்காக செய்து சாப்பிட்டிருக்கமாட்டோம் அது என்னடா தேங்காய்ப்பால் புட்டிங் என்றுதானே யோசிக்கிறீங்களா..! வாங்க நம்முடைய பதிவினை படித்தால் உங்களுக்கே தெரியும். சரி வாங்க தேங்காய் பால் புட்டிங் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்..!
தேங்காய் இருந்தால் போதும் மிகவும் ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம்..! |
தேவையான பொருட்கள்:
முதலில் தேங்காய்ப்பால் புட்டிங் செய்வதற்கு தேவையான பொருட்களை பார்ப்போம்.
- தேங்காய்துருவல் – 2 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- சோளமாவு (corn flour) – 1/4 கப்
- உப்பு – 1 சிட்டிகை
- ஏலக்காய் – 2
தேங்காய் பால் புட்டிங் செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் நாம் எடுத்துவைத்திருக்கும் 2 கப் தேங்காய்த்துருவல் மற்றும் 2 ஏலக்காயை ஒரு மிக்சிஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும் பிறகு அதிலிருந்து வரும் தேங்காய்ப்பாலை தனியாக ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் -2
பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலில் 3/4 கப்பை ஊற்றிவிட்டு 1/4 கப் பாலை தனியாக எடுத்துவைத்துவிடவும். இந்த 3/4 கப் பாலுடன் 1/2 கப் சர்க்கரையை சேர்த்து அத்துணையுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். உப்பு சேர்ப்பதால் இனிப்பு சுவையைஅதிகமான சுவையை கொடுக்கும்.
ஸ்டேப் -3
பிறகு நாம் தனியாக எடுத்துவைத்திருக்கும் 1/4 கப் பாலில் 1/4 கப் சோளமாவை (cornflour) சேர்த்து வைத்துக்கொள்ளவும். சோளமாவை சரியான அளவில்தான் சேர்க்க வேண்டும் அதிகமாக சேர்த்தால் புட்டிங் கெட்டியாக போய்விடும் அதனால் சரியான அளவில் சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப் -4
இப்போது அடுப்பை பற்றவைத்து அதில் நாம் ஸ்டேப் 2 வில் கலந்து வைத்திருக்கும். தேங்காய்ப்பால் சர்க்கரை கலவையை வைத்து நன்றாக கலந்துவிடவும். இந்த கலவை நன்றாக கொதித்து நுரைத்து வரும்போது அதனுடன் நாம் கலந்துவைத்திருக்கும் தேங்காய்ப்பால் சோளமாவு அதாவது ஸ்டேப் -3 சொல்லப்பட்டிருக்கும் கலவையை கலந்துவிடவும்.
ஸ்டேப் -5
இவையெல்லாம் நன்றாக ஒன்று கலந்து ஒரு நெய் போன்ற பக்குவத்திற்கு வரும்போது அடுப்பிலுருந்து இறக்கிவிடவும். பிறகு இந்த கலவை சூடாக இருக்கும்போதே ஒரு கிணத்திற்கு மாற்றிவிடவும். இந்த கலவை சூடு ஆறியவுடன் இதனை 2 மணிநேரம் குளிர்சாதனப்பெட்டியில் பிரீசரில் (fridge freezer) வைத்துவிட்டு பிறகு எடுத்து பார்த்தால் நமக்கு பிடித்த தேங்காய்ப்பால் புட்டிங் தயாராகிவிடும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |