பன்னீர் மசாலா தோசை செய்முறை விளக்கத்துடன்..! Dosa variety recipe in tamil..!

Dosa variety recipe in tamil

பன்னீர் மசாலா தோசை செய்முறை விளக்கத்துடன்..! Dosa variety recipe in tamil..!

Dosa variety recipe in tamil:- என்னதான் நாம் விதவிதமான உணவுகளை சாப்பிட்டாலும், பலருக்கு தோசை என்றாலே மிகவும் பிடித்த உணவாகும். குறிப்பாக குழந்தையிடம் ”இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?” என்று கேட்டதுமே பெரும்பாலான குழந்தைகள் சொல்வது… ”தோசை” என்பதைத்தானே!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய தோசையினை விதவிதமான சுவையில் செய்து கொடுத்தால் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த பதிவில் 5 விதமான தோசை வகைகளையும், அதன் செய்முறை விளக்கங்களையும் இப்போது நாம் பார்ப்போம் வாங்க.

முதலாவதாக பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி (Dosa variety recipe in tamil) என்பதை பார்க்கலாம் வாங்க.

ஹோட்டல் ஸ்டையில் Barbecue chicken செய்முறை..!

விதவிதமான தோசை செய்வது எப்படி? / Dosa variety recipe in tamil..!

பன்னீர் மசாலா தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள்:

Dosa variety recipe in tamil – தோசை மாவிற்கு தேவையான பொருட்கள்:

  1. தோசை – மாவு ஒரு கப்
  2. கடலை மாவு – 2 ஸ்பூன்
  3. சர்க்கரை – ஒரு ஸ்பூன்
  4. துருக்கிய பன்னீர் – ஒரு கப்

மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

  1. நெய் – தேவையான அளவு
  2. கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  3. எண்ணெய் – தேவையான அளவு
  4. சீரகம் – ஒரு ஸ்பூன்
  5. கிராம்பு – 4
  6. ஏலக்காய் – 2
  7. லவங்க பட்டை – 1
  8. காய்ந்த மிளகாய் – 2
  9. பெருங்காயம் தூள் – 1/4 ஸ்பூன்
  10. அரைத்த வெங்காயம் பேஸ்ட் – ஒரு கப்
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
  12. மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  13. மல்லி தூள் – 1/2 ஸ்பூன்
  14. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  15. சீரகம் தூள் – 1/2 ஸ்பூன்
  16. கரம்மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
  17. ஒன்னிரண்டாக அரைத்த தக்காளி பேஸ்ட் – ஒரு கப்
  18. கஸ்தூரி மேத்தி – சிறிதளவு
  19. தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்
  20. பச்சை மிளகாய் – 2
  21. சர்க்கரை – ஒரு ஸ்பூன்
  22. உப்பு – தேவையான அளவு
  23. வெங்காயம் – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
  24. கொத்தமல்லி இலை – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் தமிழில்..! Different chutney recipes…

விதவிதமான தோசை செய்வது எப்படி?

பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? / Dosa variety recipe in tamil ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அவற்றில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும், நெய் நன்கு உருகியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவை சேர்த்து வாசனை வரும் அளவிற்கு நன்றாக வதக்கி கொள்ளவும்.

இவ்வாறு வறுத்த மாவினை ஒரு பவுலில் எடுத்து கொள்ளுங்கள்.

பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? / Dosa variety recipe in tamil ஸ்டேப்: 2

பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அவற்றில் ஒரு ஸ்பூன் நெய், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆயில் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சூடேற்றவும்.

எண்ணெய் நன்கு சூடேறியதும் ஒரு ஸ்பூன் சீரகம், 4 கிராம்பு, 2 ஏலக்காய் மற்றும் ஒரு லவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் 1/4 ஸ்பூன் பெருங்காயம் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

ரவா தோசை செய்வது எப்படி

பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? / Dosa variety recipe in tamil ஸ்டேப்: 3

பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்த வெங்காயம் பேஸ்ட் ஒரு கப் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

வெங்காயத்தில் உள்ள பச்சை வாசனை நீங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டினை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? / Dosa variety recipe in tamil ஸ்டேப்: 4

இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் உள்ள பச்சை வாசனை நீங்கியதும் மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், மல்லி தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சீரகம் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள ஒரு கப் தக்காளியை சேர்த்து நன்கு அடிபிடிக்காதவாறு இரண்டு நிமிடங்கள் கிளறி விட வேண்டும்.

பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? / Dosa variety recipe in tamil ஸ்டேப்: 5

இந்த சமயத்தில் வறுத்து தனியாக எடுத்து வைத்துள்ள கடலை மாவையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் இதனுடன் சிறிதளவு கஸ்தூரி மேத்தி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? / Dosa variety recipe in tamil ஸ்டேப்: 6

பிறகு 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி கிரேவியை நன்றாக கிளறி 2 அல்லது 3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

இறுதியாக இந்த மசாலாவின் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கினால் பன்னீர் மசாலா தோசை செய்வதற்கு மசாலா தயார்.

பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? / Dosa variety recipe in tamil ஸ்டேப்: 7

இப்பொழுது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அவற்றை சூடேற்றி, கல் சூடேறியது கடலைமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துள்ள மாவை தோசை கல்லில் நைசாக ஊற்றவும்.

தோசை மாவு ஓரளவு வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை 3 டேபிள் ஸ்பூன் ஊற்றி அதன் மேல் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை சிறிதளவு வைத்து, மசாலாவை தோசை மீது நன்றாக பரப்பி விட வேண்டும்.

சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..!

பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? / Dosa variety recipe in tamil ஸ்டேப்: 8

மசாலா, தோசை மீது நன்கு செட் ஆகியதும் துருக்கி வைத்துள்ள பன்னீரை தோசை மீது தூவி, தோசை கரண்டியை பயன்படுத்தி நன்கு தோசையை அழுத்தி விடுங்கள்.

பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? / Dosa variety recipe in tamil ஸ்டேப்: 9

இரண்டு நிமிடங்கள் கழித்து கல்லில் இருந்து தோசையை எடுத்து விடுங்கள். இப்பொழுது சுவையான பன்னீர் மசாலா தோசை தயாராகிவிட்டது.

அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள். இந்த பன்னீர் மசாலா தோசை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் தொட்டு சம்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal