முட்டை பிரியாணி செய்வது எப்படி? | Muttai Biryani Seivathu Eppadi
குக்கரில் முட்டை பிரியாணி செய்வது எப்படி? முட்டை என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு. சைவ பிரியர்களுக்கு கூட இந்த முட்டை மிகவும் பிடித்த உணவு என்று கூட சொல்லாம். சாதரணமான முட்டையே அனைவருக்கும் பிடிக்கும் என்றால் அந்த முட்டையில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும்? நாம் இந்த பதிவில் சுவையான முட்டை பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
முட்டை மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- முட்டை – தேவையான அளவு
- எண்ணெய் – சிறிதளவு
- மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை – Muttai Biryani Eppadi Seivathu:
- முட்டை பிரியாணி செய்வதற்கு முதலில் முட்டையை வேக வைத்து கொள்ளுங்கள்.
- பின் வேகவைத்த முட்டையை லேசாக கீறி வைத்து கொள்ளவும்.
ஸ்டேப்: 1 – Egg Biryani Recipe in Tamil:
பின் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும், அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மீடியம் Flame-ல் வைத்து வறுத்து கொள்ளவும். பின் அதில் வேக வைத்த முட்டையை சேர்த்து மசாலா முட்டையில் சேரும் அளவிற்கு 2 முதல் 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
பிரியாணி மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- பிரியாணி இலை – 1
- பட்டை – 1 துண்டு
- ஏலக்காய் – 3
- கிராம்பு – 4
- நட்சத்திர சோம்பு – 1
- ஜாதிபத்திரி – 1
- சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- சோம்பு – அரை டேபிள் ஸ்பூன்
- மிளகு – அரை டேபிள் ஸ்பூன்
- மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி – 1 துண்டு (நறுக்கியது)
- பூண்டு – 6
- பச்சை மிளகாய் – 3
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை – Muttai Biryani Seivathu Eppadi Tamil:
- பிரியாணி செய்வதற்கான Fresh மசாலா தயார் செய்ய வேண்டும், அதற்கு ஒரு கடாயில் 1 பிரியாணி இலை, 1 துண்டு பட்டை, 3 ஏலக்காய், 4 கிராம்பு, 1 நட்சத்திர சோம்பு, 1 ஜாதிபத்திரி, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், அரை டேபிள் ஸ்பூன் சோம்பு, அரை டேபிள் ஸ்பூன் மிளகு, 1 டேபிள் ஸ்பூன் மல்லி சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
- பின் இதை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அரைத்த பின்பு அதில் 1 துண்டு நறுக்கிய இஞ்சி, 6 பல் பூண்டு, 3 பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.
முட்டை பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 2 (நறுக்கியது)
- தக்காளி – 1 (நறுக்கியது)
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் – அரை கப்
- கொத்தமல்லி இலை – தேவையான அளவு
- புதினா இலை – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை – குக்கரில் முட்டை பிரியாணி செய்வது எப்படி?
- இரண்டு கப் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளவும். பின் அரிசியில் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
- அதன் பிறகு பிரியாணி செய்வதற்கு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக்கொள்ளவும். பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பிரியாணி மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும்.
ஸ்டேப்: 1 – முட்டை பிரியாணி எப்படி செய்வது?
- 2 நிமிடம் கழித்து 2 நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆன பிறகு, 1 நறுக்கிய தக்காளி, சிறிதளவு மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஸ்டேப்: 2 – முட்டை பிரியாணி செய்வது எப்படி?
- வதக்கிய பின் அரை கப் தயிர் சேர்த்து கிண்டி கொள்ளவும், பின் அதில் ஊறவைத்த 2 கப் பாஸ்மதி அரிசி மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கிண்டி கொள்ளவும். பின் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக கொதிக்க வைக்கவும்.
ஸ்டேப்: 3 – Muttai Biryani Seivathu Eppadi Tamil:
- கொதித்த பிறகு மசாலா சேர்த்த முட்டையை அதில் போட்டு குக்கரை 1 விசில் வரும் வரை மூடி கொள்ளவும். 1 விசில் வந்த பிறகு வெயிட் போட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
- பிரஷர் போன பிறகு குக்கரை திறந்தால் சுவையான முட்டை பிரியாணி தயார்.
மீன் பிரியாணி செய்வது எப்படி? |
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |