முட்டை தோசை சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் இந்த மாதிரி செய்து சாப்பிட்டு இருக்கீர்களா..?

egg masala dosa in tamil

மசாலா முட்டை தோசை செய்வது எப்படி..?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் நிறைய விதமான தோசை சாப்பிட்டு இருப்போம். அதில் அதிகமாக சாப்பிடுவது பொடி தோசை, முட்டை தோச, ரவா தோசை, மைதா தோசை, கோதுமை தோசை என பல வகைகளை சாப்பிட்டு உள்ளோம் ஆனால் முட்டை தோசை சாப்பிட்டவர்கள் மசாலா முட்டை தோசை சாப்பிட்டு இருக்கிறீர்களா ? அப்படி சாப்பிட்டது இல்லையென்றால் இந்த முட்டை தோசை ஊற்றும் போது இப்படி செய்து சாப்பிடுங்கள்.

மசாலா முட்டை தோசை செய்ய தேவையான பொருட்கள்:

 1. எண்ணெய் – 100 கிராம்
 2. வெங்காயம் – 2 நறுக்கியது
 3. கடுகு – 1 ஸ்பூன்
 4. கருவேப்பிலை – 1 கொத்து
 5. பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
 6. இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
 7. தக்காளி – 2 நறுக்கியது
 8. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
 9. மல்லித்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
 10. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
 11. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
 12. முட்டை – 4
 13. உப்பு – தேவையான அளவு
 14. மிளகு தூள் – சிறிதளவு
 15. தோசை மாவு

ஸ்டேப் – 1

முதலில் கடாயை எடுத்துக்கொள்ளவும் அதில் எண்ணெய் 50 கிராம் ஊற்றிக்கொள்ளவும். அதில் கடுகு சேர்த்து வெடித்தவுடன். அதில் வெங்காயம் சேர்க்கவும்.

ஸ்டேப் – 2

வெங்காயம் அதனுடன் கருவேப்பிலை சேர்த்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

ஸ்டேப் – 3

வதங்கிய பின் அதில் தக்காளி சேர்க்கவும். தக்காளி வதங்கிய பின் அதனுடன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து  வதக்கவும்.

ஸ்டேப் – 4

ஓரளவு வதங்கிய பின் அதில் எடுத்துவைத்த முட்டையை சேர்த்து அதில் கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்பு அதனை தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 5

கடைசியாக தோசையை ஊற்றிக்கொள்ளவும் அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஓரளவு வெந்தவுடன் அதன் மீது முட்டையை ஊற்றவும் மிருதுவாக அமுக்கி கொள்ளவும். கடைசியாக அதன் மீது வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழையை தூவி கொஞ்ச நேரம் கழித்த பிறகு திருப்பு போட்டு எடுத்துக்கொள்ளவும்.

இதற்கு சட்னி சாம்பார் தேவையில்லை வேண்டுமென்றால் சாம்பார் சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்கள் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

முட்டை பிடிக்கவில்லை என்றால் இதை ட்ரை  செய்யுங்கள் ⇒  தோசையில் இந்த மாதிரி யாரும் செய்திருக்க மாட்டார்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal