பத்தே நிமிஷத்தில் ஈஸியான முட்டை பணியாரம் | Egg Paniyaram Recipe in Tamil

Egg Paniyaram Recipe in Tamil

முட்டை பணியாரம் செய்வது எப்படி? | Muttai Paniyaram Recipe in Tamil

முட்டை பணியாரம் செய்வது எப்படி: உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடியது முட்டை. சில குழந்தைகள் முட்டையை சாப்பிட அடம்பிடிப்பார்கள். பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு முட்டையை பணியாரம் போன்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை பணியாரத்தை நாம் கடையில் தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஈசியாக நாம் முட்டை பணியாரத்தை (muttai paniyaram seivathu eppadi) செய்யலாம். வாங்க அதை எப்படி எந்த மாதிரியான பொருள்களை வைத்து செய்யலாம் என்று தெரிஞ்சிக்கலாம்..

சுவையான ரவை பணியாரம் செய்வது எப்படி?

முட்டை பணியாரம் செய்ய – தேவையான பொருள்:

  • முட்டை – 4
  • உப்பு – தேவையான அளவு 
  • மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி 
  • பெரிய வெங்காயம் 1 (பொடிதாக நறுக்கியது)
  • தக்காளி 1 (பொடிதாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் 1 (பொடிதாக நறுக்கியது)
  • கேரட் 1 (துருவி வைத்தது)
  • முட்டைகோஸ் (நறுக்கியது சிறிதளவு)
  • கொத்தமல்லி (நறுக்கியது சிறிதளவு)
  • எண்ணெய் – சிறிதளவு

முட்டை பணியாரம் எப்படி செய்ய வேண்டும்:

ஸ்டேப்: 1

egg paniyaram recipe in tamil: முதலில் முட்டை பணியாரம் செய்ய ஒரு சிறிய பவுலில் 4 முட்டையை உடைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

முட்டையுடன் சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 3

நன்றாக மிக்ஸ் செய்த பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், துருவி வைத்துள்ள கேரட், பொடியாக நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸ் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.

ஸ்டேப்: 4

இப்போது பணியாரம் செய்வதற்கு அடுப்பில் பணியார சட்டியை வைக்கவும். பணியார சட்டி சூடானதும் பணியார சட்டியில் இருக்கும் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெயை ஊற்ற வேண்டும்.

சுவையான ரவா குலாப் ஜாமுன் செய்முறை..!

 

ஸ்டேப்: 5

இப்போது கலந்து வைத்துள்ள முட்டை கலவையை பணியார சட்டியில் பணியாரம் போன்று ஊற்ற வேண்டும்.

ஸ்டேப்: 6

மிதமான சூட்டில் வைத்து பணியாரத்தை சுட வேண்டும். அப்போது தான் முட்டையானது நன்றாக வேகும்.

ஸ்டேப்: 7

சிறிது நேரம் பின்னர் பணியாரத்தை கரண்டியால் திருப்பிவிட வேண்டும்.

ஸ்டேப்: 8

நன்றாக வெந்ததும் தனியாக ஒரு பிளேட்டில் முட்டை பணியாரத்தை எடுத்து வைக்கவும். குழந்தைகளுக்கு பிடித்த சுவையான முட்டை பணியாரம் ரெடியாகிட்டு.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்