தேன் நெல்லிக்காய் செய்முறை | Face Glowing Honey Amla Recipe in Tamil
நாம் சாப்பிடுவதற்கு எதற்காக உயிர் வாழ்வதற்கு தானே. ஆனால் நாம் சாப்பிடுவது நமக்கே ஆபத்து விளைவிக்கிறது. அதேபோல் இங்கு அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் தலை முடி பிரச்சனை தான். அதன் பின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், வறட்சி தன்மை என நிறைய உள்ளது அல்லவா..? ஆனால் ஒரு சிலருக்கு இந்த பிரச்சனைகள் எதுவும் இருப்பதில்லை. அவர்கள் முகம் எப்போதும் பொலிவுடனும், முடி நீளமாகவும் உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா..?
ஏனென்றால் அவர்களுடைய உணவு முறை சரியாக இருக்கும். அவர்களின் உடலுக்கு சரியாக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதனால் அவர்களுக்கு முகத்தில் பிரச்சனை இல்லை. தலை முடியிலும் பிரச்சனை என்பது இல்லாமல் இருக்கிறது. ஆகவே அதேபோல் நம்முடைய உடலுக்கு அனைத்து விதத்திலும் சத்துக்கள் அளிக்குமாறு சூப்பரான ரெசிபியை இங்கு பார்ப்போம் வாங்க..!
தேன் நெல்லிக்காய் செய்முறை:
இந்த ஒரு காயை மட்டும் எங்கு பார்த்தாலும் உடனே வாங்கி வந்து வந்துவிடுங்கள். அப்போது தான் நம் உடலுக்கு சத்தான ரெசிபி செய்ய முடியும். அது என்ன காய் என்றால் நெல்லிக்காய்.
தேவையான அளவு நெல்லிக்காய் வாங்கி வந்து, அதனை சுத்தமாக கழுவிவிட்டு இட்லி பானையின் வைத்து அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக அவிக்க வேண்டாம். ஓரளவு அவித்துக் கொண்டால் போதும்.
பின்பு அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதை ஒரு ஸ்பூன் வைத்து குட்டி குட்டியாக ஓட்டை போட்டு வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாயை வைத்து நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். ஓரளவு கொதித்த பின் வேகவைத்து எடுத்த நெல்லிக்காயை அதில் சேர்க்கவும். பாகு கெட்டியாகும் அளவிற்கு நன்கு கலந்துவிடவும். ஓரளவு கெட்டியாக மாறிய பின் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும்.
ஒரு துண்டு நெல்லிக்காய் சாப்பிட்டால் அப்படி என்ன நன்மை கிடைக்க போகிறது..?
அதன் பின் அதனை ஒரு பாட்டிலில் பாகுடன் சேர்த்து மூடி வைக்கவும். அதில் 5 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும்.
இதிலிருந்து தினமும் 1 காய் சாப்பிட்டால் அவ்வளவு நல்லது. முக்கியமாக இதனை 5 நாட்களுக்கு மேல் வைத்து சாப்பிட வேண்டாம். ஏனென்றால் வெள்ளை சர்க்கரை சேர்த்து இருந்தால் ஒரு மாதம் கூட வைக்கலாம். ஆனால் நாட்டு சர்க்கரை சேர்ப்பதால் 5 நாட்கள் தான் சாப்பிடவேண்டும். இது தான் அதிகளவு சத்துக்கள் என்பதால் இதை சாப்பிடவேண்டும்.
மிகவும் ருசியான நெல்லிக்காய் மிட்டாய் செய்வது எப்படி..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |