கோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி? Godhumai halwa seivathu eppadi in tamil..!
Godhumai Halwa Seivathu Eppadi in Tamil: கோதுமை அதிகம் ஆரோக்கியம் நிறைந்த தானியமாகும். இவற்றில் நாம் பலவகையான உணவுகளை செய்து சாப்பிடுவோம். அந்த வகையில் இன்று நாம் கோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி (godhumai halwa seivathu eppadi) என்பதை பெற்றி தெரிந்து கொள்வோம். இந்த கோதுமை அல்வாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சரி 10 நிமிடத்தில் நாவில் எச்சில் ஊறவைக்கும் கோதுமை மாவு அல்வா செய்வது எப்படி (godhumai halwa seivathu eppadi in tamil) என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சுவையான ட்ரை ஃப்ரூட் ஹல்வா செய்முறை..! |
பத்து நிமிடத்தில் கோதுமை அல்வா செய்வது எப்படி ?
கோதுமை அல்வா செய்ய தேவையான பொருட்கள்:-
- கோதுமை மாவு – 1/2 கப்
- சர்க்கரை – ஒரு கப்
- நெய் – 1/2 கப்
- முந்திரி – 100 கிராம்
கோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி?
கோதுமை அல்வா செய்வது எப்படி தமிழில் ஸ்டேப் / godhumai halwa seivathu eppadi in tamil: 1
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1/2 கப் நெய்யினை ஊற்றவும். நெய் நன்றாக உருகியதும் 100 கிராம் முந்திரி பருப்புகளை பொரித்து தனியாக எடுத்து கொள்ளவும்.
கோதுமை அல்வா செய்வது எப்படி தமிழில் ஸ்டேப் / godhumai halwa seivathu eppadi in tamil: 2
பின் முந்திரி பருப்பு வறுத்த நெய்யிலேயே 1/2 கப் கோதுமை மாவினை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதாவது 2 இருந்து 3 நிமிடங்கள் வரை அந்த நெய்யில் வதக்க வேண்டும். அந்த சமயம் அடுப்பை மிதமான சூட்டில் வைத்திருக்க வேண்டும்.
கோதுமை அல்வா செய்வது எப்படி தமிழில் ஸ்டேப் / godhumai halwa seivathu eppadi in tamil: 3
அதன் பிறகு 1/2 கப் கோதுமை மாவிற்கு 2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை அடுப்பில் வைத்திருக்கும் கோதுமை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும். (அதாவது நெய் நன்றாக திரண்டு வரும் வரை நன்றாக கிளற வேண்டும்).
கோதுமை அல்வா செய்வது எப்படி தமிழில் ஸ்டேப் / godhumai halwa seivathu eppadi in tamil: 4
அதன் பிறகு ஒரு கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சர்க்கரையினை சேர்க்கும் போது மாவானது இளகி போகும். அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை மாவினை கிளற கிளற இளகும் தன்மை சரியாகிவிடும்.
மீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க ..! |
கோதுமை அல்வா செய்வது எப்படி தமிழில் ஸ்டேப் / godhumai halwa seivathu eppadi in tamil: 5
மாவில் சர்க்கரையானது நன்றாக மிக்ஸ் ஆனதும், இரண்டு ஸ்பூன் நெய்யினை சேர்த்து நன்றாக கிளறுங்கள். இப்பொழுது 90% கோதுமை அல்வா தயார்.
அதன் பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பினை இதனுடன் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் சுவையான கோதுமை அல்வா தயார் இப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியதும் அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |