தீபாவளிக்கு இந்த ஸ்பெஷல் ஸ்வீட் செஞ்சி பாருங்க..!
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது சமையல் குறிப்புதான். அதுவும் நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ருசியான ஸ்வீட் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த ஸ்வீட் ரெசிபியை ஒருமுறை செய்து சுவைத்து பார்த்தீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் செய்து சுவைக்க தோன்றும். அப்படி என்ன ஸ்வீட் என்றுதானே யோசிக்கிறீர்கள். இந்த பதிவை முழுதாக படித்து பாருங்கள் உங்களுக்கே புரியும். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
தேவையான பொருட்கள்:
முதலில் இந்த தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- கோதுமை மாவு – 2 கப்
- நெய் – 3 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – 2 கப்
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – 2 1/4 கப்
- பாதாம் – 5
- பிஸ்தா – 5
- குங்குமப்பூ – 1 சிட்டிகை
- கேசரி பவுடர் – 1/4 டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை :
ஸ்டேப் -1:
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவை சேர்த்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கைகளால் கலந்து விடவும். பின்னர் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு பெரிய உருண்டையாக உருட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் அதன் மேலே 1 டேபிள் ஸ்பூன் நெய்யை தடவி 30 நிமிடத்திற்கு ஊறவிடுங்கள்.
ஸ்டேப் -2:
இந்த மாவு ஊறிக்கொண்டிருக்கும் நேரத்தில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் 2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரைப்பாகு பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடுங்கள்.
மேலும் இதனுடன் 1 சிட்டிகை குங்குமப்பூ, 1/4 டீஸ்பூன் கேசரி பவுடர் மற்றும் 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிடுங்கள்.
ஸ்டேப் -3:
பிறகு நாம் முன்பு தயார் செய்து வைத்திருந்த மாவு உருண்டையிலுருந்து ஒரு சிறிய உருண்டையை எடுத்து அதனை சப்பாத்தி தேய்க்கும் கட்டையை வைத்து ஒரு பெரிய சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேய்த்த அந்த சப்பாத்தியிலுருந்து சிறிய சிறிய வட்ட வடிவங்களில் நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த சிறிய வட்ட வடிவிலுள்ள மாவின் நடுவில் ஒரு கத்தியை வைத்து சிறிய கோடுகள் போடுங்கள். அதனின் இருமுனையையும் சேர்த்து நன்கு மடித்து கொள்ளுங்கள். இதனை போலவே மீதமுள்ள மாவுகளையும் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4:
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்திருந்த மாவுகளை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5:
பொறித்த இதனை நாம் முன்பு தயார் செய்து வைத்திருந்த சர்க்கரைப்பாகில் 5 நிமிடத்திற்கு போட்டுவைத்தபிறகு அதனை எடுத்து அதன் மீது நாம் எடுத்துவைத்திருந்த 5 பாதம் மற்றும் 5 பிஸ்தா இவற்றை இரண்டும் மூன்றுமாக உடைத்து அதன் நமது ஸ்வீட் மீது போட்டு அதன் பிறகு அனைவருக்கும் பரிமாறலாம்.
இப்பொழுது நமது தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ரெடி வாங்க சுவைக்கலாம்..! நீங்களும் இந்த ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபியை செய்து சுவைத்து பாருங்கள்.
இதையும் பாருங்கள் => தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா இந்த மாதிரி செய்யுங்கள்.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |