ஆரோக்கியமான கம்பு வெஜிடபிள் கஞ்சி செய்யலாம் வாங்க !!!

கம்பங்கூழ் செய்முறை

கம்பங்கூழ் செய்முறை மற்றும் குதிரைவாலி கூழ் செய்முறை விளக்கம்..!

சுவையும் ஆரோக்கியமும் மிக்க கம்பு வெஜிடபிள் கஞ்சி அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியவையாகும்.

கம்பில் அதிகளவு இரும்பு சத்து உள்ளதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த வெஜிடபிள் கஞ்சி கொடுப்பதன் மூலம் அதிக ஆரோக்கியத்தை கொடுக்கலாம்.

இதையும் படிக்கவும்  சுவையான வெஜிடபிள் பாஸ்தா சூப் செய்யலாம் வாங்க !!!

சத்து நிறைந்த கம்பு வெஜிடபிள்  கஞ்சி (kambu recipes)

கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய இந்த வெஜிடபிள் கஞ்சி (kambu recipes) எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 1. ஊறவைத்த கம்பு – 1/2 கப்
 2. மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
 3. கடுகு, சீரகம், மிளகு – தலா 1/2 டீஸ்பூன்
 4. ஏலக்காய் – 2
 5. பிரியாணி இலை – 1
 6. வெஜிடபிள் (கேரட், பீன்ஸ், காலிஃ ப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து அரைத்தது) – 3 கப்
 7. நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
 8. பூண்டு – 3 பல்
 9. உப்பு, மிளகு தூள் – சுவைக்கேற்ப
 10. எலுமிச்சை பழம் – 1/2 பழம்

கம்பு வெஜிடபிள் கஞ்சி (கம்பங்கூழ் செய்முறை) தயாரிக்கும் முறை:

கம்பங்கூழ் செய்முறை ஸ்டேப்:1

கம்பங்கூழ் செய்முறை முதலில் கம்பை நன்றாக சுத்தம் செய்து, ஊறவைத்து கொள்ளவும்.

கம்பங்கூழ் செய்முறை ஸ்டேப்: 2

பின்பு குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, சீரகம், மிளகு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

கம்பங்கூழ் செய்முறை ஸ்டேப்: 3

பின்பு வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விசில் அடங்கியவுடன் அவற்றில் இருக்கும் பிரியாணி இலையை எடுத்துவிட்டு அந்த கலவையை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

கம்பங்கூழ் செய்முறை ஸ்டேப்: 4

பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அவற்றில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்கவும்.

கம்பங்கூழ் செய்முறை ஸ்டேப்: 5

பின்பு அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் அல்லது காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.

கம்பங்கூழ் செய்முறை ஸ்டேப்: 6

பின்பு இவற்றில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் கஞ்சி தயார்.

கம்பங்கூழ் பயன்கள் ..!

கம்பங்கூழ் பயன்கள் :1

இந்த வெஜிடபிள் கஞ்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவாகும். கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவாகும். இந்த வெஜிடபிள் கஞ்சியை குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம்.

கம்பங்கூழ் பயன்கள் :2

இரவில் அதிகநேரம் தூங்காமல் கண் விழித்திருப்பவர், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதியில் வேலை செய்பவர்கள், அதிக உடல் உஷ்ணமுடையவர்கள் என்று அனைவரும் இந்த கம்பங்கூழ் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கம்பங்கூழ் பயன்கள் :3

உடல் பலம் பெற கம்பு ஒரு சிறந்த உணவாகும், எனவே உடல் வலிமையுடைய அதிகளவு இந்த கம்பங்கூழ் சாப்பிடலாம்.

இதுவரை கம்பங்கூழ் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டோம், இதை தொடர்ந்து குதிரைவாலி கூழ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

இதையும் படிக்கவும்  உடலுக்கு வலுசேர்க்கும் உளுந்தங்களி செய்வது எப்படி?

குதிரைவாலி கூழ் செய்ய தேவையான பொருட்கள்:

 1. குதிரைவாலி அரிசி – 50 கிராம்,
 2. கேழ்வரகு மாவு – 200 கிராம்,
 3. உப்பு – தேவைக்கேற்ப,
 4. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 5,
 5. தயிர் – 1/2 கப்,
 6. தண்ணீர் – தேவையான அளவு

குதிரைவாலி கூழ் செய்வது எப்படி ???

குதிரைவாலி கூழ் செய்முறை ஸ்டேப் :1

முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும்.

குதிரைவாலி கூழ் செய்முறை ஸ்டேப் : 2

ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்ததும் அதில் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.

குதிரைவாலி கூழ் செய்முறை ஸ்டேப் : 3

தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு, கூழைத் தொட்டுப் பார்த்தால், அது கையில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்பொழுது இறக்கவும்.

குதிரைவாலி கூழ் செய்முறை ஸ்டேப் : 4

பின் ஆறியதும் தயிர், சின்ன வெங்காயம், உப்பு, தண்ணீர் விட்டு கரைத்து பரிமாறவும்.

குதிரைவாலி கூழ் பயன்கள்

குதிரைவாலி கூழ் பயன்கள் :1

குதிரைவாலியில் அதிகளவு  கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு நல்ல வலிமை தரும். மேலும் இவற்றுள் இரும்புசத்து நிறைந்துள்ளதால் இரத்த உற்பத்திக்கு உதவுகிறது.

குதிரைவாலி கூழ் பயன்கள் :2

குதிரைவாலியில் அதிகளவு  நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகிறது.

குதிரைவாலி கூழ் பயன்கள் :3

பெண்கள், இதய நோயாளிகள் இந்த குதிரைவாலி கூழ் அதிகளவு உண்டுவர உடலுக்கு மிகவும் நல்லது.

 

இதையும் படிக்கவும்  வாழைப்பழ கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com