1 கப் கோதுமை மாவில் Soft- ஆன பிஸ்கட் செய்முறை..! Homemade biscuits recipe..!

1 கப் கோதுமை மாவில் Soft-ஆன பிஸ்கட் செய்முறை / Homemade biscuits recipe in tamil..!

Homemade biscuits recipe:- பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான இரண்டு செய்முறைகளில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். அதுவும் கோதுமை மாவை பயன்படுத்திதான் நாம் கோதுமை பிஸ்கட் செய்யப்போகிறோம். பிஸ்கட் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தேவைப்படுமே என்று அதிகமாக யோசிக்க வேண்டாம்… இந்த கோதுமை பிஸ்கட்டினை அடுப்பில் வெறும் கடாயை பயன்படுத்தி தான் செய்ய போகிறோம்… இந்த கோதுமை பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த கோதுமை பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.  சரி கோதுமை பிஸ்கட் செய்ய தயாரா? முதலில் கோதுமை பிஸ்கட்செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

வாயில் வைத்ததும் கரையும் புது ஸ்வீட் ரெசிபி..!

Wheat biscuit recipe in tamil type 1

தேவையான பொருட்கள்:-

  1. கோதுமை மாவு – 1 கப்
  2. சர்க்கரை பவுடர் – 1/2 கப்
  3. நெய் (அல்லது) வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  4. பொரிப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

ஸ்டேப்: 1

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கப் கோதுமை, சர்க்கரை பவுடர் 1/2 கப் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ஸ்டேப்: 2

பின் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கோதுமை மாவை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள். (குறிப்பு: இவற்றில் சர்க்கரை சேர்த்திருப்பதால் தண்ணீர் சேர்த்து பிசையும் போது மாவு இளகும், எனவே தண்ணீர் சேர்க்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.)

ஸ்டேப்: 3

wheat biscuit

கோதுமை மாவை பிசைந்த பின் 10 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும், பின் சப்பாத்தி கட்டையில் பிசைந்த கோதுமை மாவை அப்படியே எடுத்து பெரிய உருண்டையாக உருட்டி ஓரளவு தடிமனாக தேய்த்து கொள்ளுங்கள். மேல் கட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் மாவினை தேய்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

wheat biscuit 3

 

பின் மேல் கட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு சிறிய மூடியை எடுத்துக்கொள்ளுங்கள், பின் இந்த மூடியை பயன்படுத்தி தேய்த்த கோதுமை மாவை சிறு சிறு துண்டுகளாக கட் செய்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் பிஸ்கட்டை வைத்து நன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். (குறிப்பு பிஸ்கட்டை எண்ணெயில் பொரிக்கும் போது அடிக்கடி பிஸ்கட்டினை கிளறிவிட வேண்டும்)

இவ்வாறு பொரித்தெடுத்தால் சுவையான கோதுமை பிஸ்கட் தயார்.Wheat biscuit recipe in tamil type 2

Homemade biscuits recipe in tamil

கோதுமை பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்:

  1. நெய் – ஒரு கப்
  2. சர்க்கரை – ஒரு கப் (மிக்சியில் பொடிதாக அரைத்து கொள்ளுங்கள்)
  3. கோதுமை மாவு – ஒரு கப்
  4. கடலை மாவு – ஒரு கப்
  5. ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன்
  6. நட்ஸ் – சிறிதளவு

கோதுமை பிஸ்கட் செய்முறை

homemade biscuits recipe

கோதுமை பிஸ்கட் செய்யும் முறை ஸ்டேப்: 1

முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள்.

அவற்றில் ஒரு கப் நெய் சேர்த்து Hand Beater-ஐ பயன்படுத்தி 10 நிமிடங்கள் நன்றாக கலந்து கொள்ளவும்.

கோதுமை பிஸ்கட் செய்முறை  ஸ்டேப்: 2

பின் ஒரு கப் சக்கரையை மிக்சியில் பொடி செய்து இந்த நெய்யுடன் சேர்த்து திரும்பவும் Hand Beater-ஆள் நன்றாக கலந்து கொள்ளுங்கள், அதாவது நல்ல கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு கலந்து கொள்ளுங்கள்.

கோதுமை பிஸ்கட் செய்து எப்படி? ஸ்டேப்: 3

பின் ஒரு கப் கடலை மாவு, ஒரு கப் கோதுமை மாவு இவை இரண்டையும் நன்றாக கட்டிகள் இல்லாதவாறு சல்லடையில் சலித்து. பின் இந்த கலவையில் சேர்த்து நன்றாக பிசைந்து விடவும்.

கோதுமை பிஸ்கட் செய்யும் முறை ஸ்டேப்: 4

இதனுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியினை சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு பிசைந்த கோதுமை மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி கொள்ளுங்கள்.

கோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி? ஸ்டேப்: 5

பின் அதன் மீது பொடிதாக நறுக்கியாக நட்ஸினை வைத்து அழுத்திவிடவும்.

இவ்வாறு மிதமுள்ள அனைத்து மாவையும் உருட்டி பிஸ்கட் போல் செய்து கொள்ளுங்கள்.

இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..!

கோதுமை பிஸ்கட் செய்யும் முறை ஸ்டேப்: 6

இப்பொழுது சில்வர் அல்லது அலுமினியம் தட்டில் நன்றாக நெய் தடவி கொள்ளுங்கள் அவற்றில் தயார் செய்து வைத்துள்ள பிஸ்கட்டினை வைக்கவும்.

பின் அடுப்பில் ஒரு அகன்ற கடாய் வைத்து கொள்ளுங்கள்.

குறிப்பு:- கடாயில் தண்ணீர் ஊற்றக்கூடாது

பின் அந்த கடாயில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அந்த ஸ்டாண்ட் மீது செய்து வைத்துள்ள பிஸ்கட்டினை அந்த தட்டுடன் அப்படியே உள்ளே வைக்க வேண்டும்.

கோதுமை மாவில் பிஸ்கட் செய்வது எப்படி? ஸ்டேப்: 7

பின் கடாயை காற்று புகாத அளவிற்கு மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 15 முதல் 30 நிமிடங்கள் நன்றாக வேகவைக்கவும்.

30 நிமிடம் கழித்த பின் அடுப்பில் இருந்து இறக்கி, பிஸ்கட்டினை நன்றாக ஆறவிடுங்கள்.

இப்பொழுது சுவையான கோதுமை பிஸ்கட் தயார். இந்த பிஸ்கட் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும், மொறு மொறுப்பாகவும், மிகவும் சாப்டாக இருக்கும். ஒரு முறை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

நன்றி வணக்கம்…🙏🙏🙏

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>samayal kurippugal in tamil