பேக்கரி ஸ்டைல் ஹனி கேக் செய்வது எப்படி? | Honey Cake Recipe in Tamil

Advertisement

ஹனி கேக் செய்வது எப்படி? | Honey Cake Recipe in Tamil

கிறிஸ்துமஸ் என்றாலே அனைவரது வீட்டிலும் கேக் செய்வார்கள், அந்த வகையில் இந்த பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஹனி கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த கேக் செய்வதற்கு அதிகமான பொருள் தேவைப்படாது, வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எளிமையான முறையில் செய்யலாம். சரி வாங்க சட்டுனு ஹனி கேக் செய்வது எப்படி? (Honey Cake Recipe in Tamil) என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  1. முட்டை – 1
  2. சர்க்கரை – அரை கப்
  3. எண்ணெய் – அரை கப்
  4. பால் – அரை கப்
  5. வெண்ணிலா எசன்ஸ்- 1 டேபிள் ஸ்பூன்
  6. மைதா மாவு – ஒன்றரை கப்
  7. பேக்கிங் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
  8. பேக்கிங் சோடா – அரை டேபிள் ஸ்பூன்
  9. உப்பு – கால் டேபிள் ஸ்பூன்
  10. தேன் – 2 டேபிள் ஸ்பூன்
  11. தண்ணீர் – தேவையான அளவு
  12. ஜாம் – ஒரு கப்
  13. தேங்காய் துருவல் – 1 கப்

செய்முறை – தேன் கேக் செய்வது எப்படி?

ஹனி கேக் செய்வது எப்படி

  • முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊத்தி நன்றாக கலக்கவும். (முட்டை வேண்டாம் என்பவர்கள் முட்டை மற்றும் பாலுக்கு பதிலாக தயிர் சேர்த்து கொள்ளவும்)
  • முட்டையை நன்கு கலக்கிய பின் அரை கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதில் அரை கப் எண்ணெய் சேர்த்து கொள்ளவும் (எண்ணெய்க்கு பதிலாக உருக்கிய வெண்ணெய் சேர்த்து கொள்ளலாம்). இவற்றை நன்றாக ஒன்று சேர்த்த பின் அரை கப் பால் சேர்த்து கலக்கவும்.

ஸ்டேப்: 1 – Honey Cake Recipe in Tamil:

  • அதன் பிறகு வாசனைக்காக 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். பின் அதில் ஒன்றரை கப் (200 கிராம்) மைதா மாவு, 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர், அரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, கால் டேபிள் ஸ்பூன் உப்பு சல்லடையை பயன்படுத்தி சேர்க்கவும். இதனை சேர்த்த பின்பு அதை கட்டி பிடிக்காதவாறு நன்றாக கிண்டவும்.

ஸ்டேப்: 2 – ஹனி கேக் செய்வது எப்படி?

  • கிண்டிய பின் இதனை வேக வைப்பதற்கு கேக் டின்னில் அதன் ஓரத்தில் வெண்ணெய் தடவி இதனை எடுத்து ஊற்றி ஓவெனில் 350 Fahrenheit-ல் வைத்து 20-22 நிமிடம் வேக வைக்கவும்.
  • குக்கரில் வேக வைப்பவர்கள் குக்கரின் அடிப்பகுதியில் உப்பு சேர்த்து, ஸ்டாண்ட் வைத்து ஸ்டாண்டின் மேல் இந்த கேக் டின்னை வைத்து குக்கரை மூடி வேக வைக்க வேண்டும். கேக் வெந்துவிட்டதா என்பதை பார்ப்பதற்கு குச்சியை பயன்படுத்தி அதை குத்தி பார்க்கலாம். குச்சியில் எதுவும் ஓட்டவில்லையெனில் கேக் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

ஸ்டேப்: 3 – Honey Cake Recipe in Tamil

  • கேக்-ல் சேர்ப்பதற்கான ஹனி சிரப் தயார் செய்ய வேண்டும், அதற்கு ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து இந்த ஹனி சிரப்பை கேக்கின் மேல் கொஞ்சமாக சேர்க்கவும்.

ஸ்டேப்: 4 – ஹனி கேக்:

  • பின்னர் கேக்கின் மேல் வைப்பதற்கான ஜாம் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு தண்ணீர் மற்றும் உங்களிடம் இருக்கும் ஜாம் (kissan jam) ஒரு கப் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கொதித்த பின் ஜாமை கேக்கின் மேல் ஒரு spatula-வை பயன்படுத்தி தடவவும்.
  • பின்பு ஒரு கடாயில் 1 கப் தேங்காய் துருவலை சேர்த்து அதனை வருத்து கொள்ளவும்.
  • இப்பொழுது வறுத்த தேங்காய் துருவலை கேக்கின் மேல் சேர்த்தால் சுவையான ருசியான ஹனி கேக் தயாராகிவிடும்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சுகர் குக்கீஸ் செய்யும் முறை (Christmas Special Sweets)..!
Christmas Cookies- Microwave Oven இல்லாமல் சுலபமாக செய்யலாம்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement