எண்ணெய் இல்லாமல் பூரி சுட முடியுமா.? இனிமேல் சுடலாம் வாங்க..!

Advertisement

எண்ணெய் இல்லாமல் பூரி செய்வது எப்படி.? 

ஹாய் நண்பர்களே..? பூரியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். விரும்பி சாப்பிட்டாலும் எண்ணெய் செரிமான பிரச்சனை ஏற்படுத்தும். உடலுக்கும் கேடு விளைவிக்கும். இந்த பூரியை அடிக்கடியும் சாப்பிட முடியாது. பூரியை விரும்பி சாப்பிடுவார்கள் இனி அடிக்கடி பூரியை சாப்பிடலாம். அதுவும் எண்ணெயில் போட்டு எடுக்காத பூரி. அது எப்படி எண்ணெயில் போட்டு எடுக்காமல் பூரி சுட முடியுமா.? என்று யோசிப்பீர்கள்.! வாங்க எண்ணெய் இல்லாமல் பூரி எப்படி சுடுவது என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் செய்து ருசியுங்கள் ⇒ பானி பூரி வீட்டிலேயே செய்யலாமா ?

தண்ணீரில் பூரி சுடுவதற்கு தேவையான பொருட்கள்

  • கோதுமை – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய்- 1 தேக்கரண்டி
  • தண்ணீர் – தேவையான அளவு

தண்ணீரில் பூரி சுடுவது எப்படி.?

செய்முறை:1

முதலில் கோதுமை மாவை பூரிக்கு எப்பொழுதும் பிசைவது போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

செய்முறை:2

அடுத்து பூரிக்கு ஏற்றது போல் பிசைந்து வைத்திருக்கும்  மாவை உருட்டி வைத்து கொள்ள வேண்டும்.

செய்முறை:3

பின் அடுப்பை பத்த வைத்து கடாயை வைக்க வேண்டும். அதில் எண்ணெய்க்கு பதிலாக தண்ணீர் ஊற்ற வேண்டும்.

செய்முறை:4

தண்ணீர் கொதித்த பிறகு பூரியை போட்டு எடுக்க வேண்டும். எண்ணெயில் போட்டு எப்படி எடுப்போமோ அதே போல் தான் எடுக்க வேண்டும்.

செய்முறை:5

பூரியை சுட்டு எடுத்ததும் இன்னொரு கடாயில் இட்லி பாத்திரம் வைத்து அதில் உள்ள தட்டுகளில் பூரியை வைக்க வேண்டும். சிறுது நேரம் சூடேற்றினால் பூரி உப்பி அழகா இருக்கும்.

பூரியை எண்ணெயில் சுட்டால் சிலருக்கு செரிமான பிரச்சனை ஏற்படும். அதனால் சாப்பிட மாட்டார்கள். இனி அந்த கவலை இருக்காது. அனைவரும் பூரியை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். திகட்டவே திகட்டாது. மேல் கூறப்பட்டுள்ளது போல் பூரியை செய்து ருசியுங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement