ஐயர் வீட்டில் செய்யும் அருமையான பூண்டு சட்னி..! இரண்டு இட்லி அதிகமாக உள்ள போகும்..!

Advertisement

Iyar Veetu Poondu Satni

நண்பர்களே உங்கள் வீட்டில் பூண்டு சட்னி செய்து இருப்பீர்கள். ஆனால் ஐயர் வீட்டில் செய்யும் அருமையான பூண்டு சட்னி எப்போதும் சூப்பர் தான். ஏனென்றால் அங்கு செய்யும் உணவிற்கு மட்டும் தான் தனி சுவை இருக்கும் என்பார்கள். அவ்வளவு ஏன் வீட்டில் கொடுக்கும் புளி சாதத்தை விட கோவிலில் கொடுக்கும் சாதத்திற்கு சுவையே  தனி தான். சரி இந்த பதிவின் வாயிலாக ஐயர் வீட்டில் செய்யும் பூண்டு சட்னி செய்முறையை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Iyar Veetu Poondu Satni:

தேவையான பொருட்கள்:

  • பூண்டு 50 கிராம்
  • மிளகு – சிறிதளவு
  • நல்ல எண்ணெய் – சிறிதளவு
  • காய்ந்த மிளகாய்  – காரத்திற்கு ஏற்றது போல்

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் நல்ல எண்ணெயை ஊற்றி, அதில் மிளகாய் போட்டு ஒரு முறை நன்கு வறுக்கவும். அது கருமையாக மாறாமல் வறுக்கவும்.

அதன் பின்பு அதில் பூண்டு, மிளகு சேர்த்து நன்கு வறுக்கவும். அது நன்கு வருத்தவுடன்  அதனை ஆறவைத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

அரைத்தவுடன் கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் அதில் கருவேப்பிலை போட்டு அதன் பின்பு அதில் சட்னியை ஊற்றவும். அவ்வளவு தான் உங்களுக்கு ஐயர் விட்டு சட்னி ரெடி ஆகிவிடும்.

இட்லி, தோசைக்கு இந்த சட்னி செய்து பாருங்க

காலையில் அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் ஈசியாக செய்ய சூப்பரான சட்னி ரெடி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement