ஐயர் வீட்டு மோர் குழம்பு வீடே மணமணக்க செய்யலாம் வாங்க..!

Advertisement

ஐயர் வீட்டு மோர் குழம்பு செய்வது எப்படி..?

பொதுவாக சிலருக்கு சமையல் என்றால் சொல்லவே வேண்டாம் ஏனென்றால் அந்த அளவிற்கு விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அதிலும் சிலர் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள். என்ன  தான் நாம் பார்த்து பார்த்து வீட்டில் சமைத்தாலும் கூட அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான சுவை இல்லை என்று தான் கூறுவார்கள். சிலர் வீட்டில் சொல்லுவார்கள் எனக்கு ஐயர் வீட்டு புளிக்குழம்பு, சாம்பார் சாதம், மோர் குழம்பு அல்லது வத்தல் குழம்பு இதுபோன்றவற்றையும் செய்து கொடு என்று கேட்பார்கள். நாம் இது எல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னாலும் அது நன்றாக இருக்காது. ஆகையால் இதை நினைத்தை நீங்கள் கவலை பட வேண்டாம். வீடே மணமணக்க வைக்கும் சுவையில் அசத்தலான ஐயர் வீட்டு மோர் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக்கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம் வாருங்கள்.

How to Make Iyer Veetu Mor Kulambu in Tamil | ஐயர் வீட்டு மோர் குழம்பு செய்வது எப்படி.?

மோர் குழம்பு

ஐயர் வீட்டு மோர் குழம்பு செய்வது எப்படி என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • தயிர்- 1 கப் 
  • தேங்காய்- 1/2 கப் 
  • பச்சை மிளகாய்- 3
  • வெள்ளரிக்காய்- சிறிய துண்டு 
  • இஞ்சி- சிறிய துண்டு 
  • சின்ன வெங்காயம்- 3
  • காய்ந்த மிளகாய்- 3
  • கடலை பருப்பு- 1 தேக்கரண்டி 
  • சீரகம்- 1/2 தேக்கரண்டி 
  • கடுகு- 1 தேக்கரண்டி 
  • மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி 
  • பெருங்காயத்தூள்- 1/2 தேக்கரண்டி 
  • உளுத்தம் பருப்பு- 1/2 தேக்கரண்டி 
  • உப்பு- தேவையான அளவு 
  • எண்ணைய்- தேவையான அளவு 
ஐயர் வீட்டு தக்காளி குழம்பு செய்யலாம் வாங்க..

ஐயர் வீட்டு மோர் குழம்பு வைப்பது எப்படி..?

ஐயர் வீட்டு மோர் குழம்பு செய்வது எப்படி

அடுப்பில வெள்ளரிக்காய் வேக வைத்தல்:

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காயை வேக வைய்யுங்கள். அதன் பின்பு எடுத்துவைத்துள்ள கடலை பருப்பை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவித்து விடுங்கள்.

தேங்காய் அரைத்தல்:

இப்போது ஒரு மிக்சி ஜாரில் துருவி வைத்துள்ள தேங்காய், எடுத்துவைத்துள்ள சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஊறிய கடலை பருப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள். 

வெள்ளரிக்காயுடன் பொருட்களை சேர்த்தல்:

அடுத்து அடுப்பில் வேக வைத்துள்ள வெள்ளரிக்காய் நன்றாக வெந்த பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு நன்றாக கொதிக்க விட்டு கீழே இறக்கி வைத்து விடுங்கள்.

தயிரை கடைதல்:

அதன் பிறகு எடுத்துவைத்துள்ள 1 கப் தயிரை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

கடாயில் கடுகை தாளித்தல்:

கடைசியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெயை காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் எடுத்துவைத்துள்ள கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

கடைசியாக மோர் குழம்பு தயார்:

இப்போது நீங்கள் தாளித்து வைத்துள்ள கடுகு மற்றும் மோரினை வெள்ளிக்காய் வேக வைத்துள்ள குழம்புடன் சேர்த்து நன்றாக கலந்து கொண்டால் போதும் சுவையான ஐயர் வீட்டு மோர் குழம்பு தயார்.

ஐயர் வீட்டு முருங்கைக்காய் குழம்பு..! வீட்டு வாசல் வரை மணக்கும்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement