ஐயர் வீட்டு தக்காளி குழம்பு செய்வது எப்படி.?
பொதுவாக வீட்டில் குழம்பு வைத்து சாப்பிட்டாலும் வெளியில் சாப்பிட்டாலோ அல்லது வேறு யாரு வீட்டில் சாப்பிட்டாலும் அதனுடைய ருசியானது வேற மாறி இருக்கும் என்று தான் சொல்வார்கள். அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு நீ மட்டும் செய்றது ஏன் இப்படி இருக்கு என்றெல்லாம் சண்டை போடுவார்கள். அதேபோல் நம் அனைவருக்குமே ஐயர் வீட்டில் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். அவர்கள் செய்யும் சமையல்கள் அனைத்தும் அவ்வளவு சூப்பராக இருக்கும். அந்த வகையில் இன்று ஐயர் வீட்டு தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் – 15
- தக்காளி- 4
- எண்ணெய்- 2 தேக்கரண்டி
- கருவேப்பிலை- ஒரு கைப்பிடி
- பச்சை மிளகாய்- 2
- உப்பு- தேவையான அளவு
- மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
- மல்லி தூள்- 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
- உளுத்தப்பருப்பு- 1/4 தேக்கரண்டி
- கடலை பருப்பு- 1/2 தேக்கரண்டி
- வெந்தயம்- 10
- சோம்பு- 1/4 தேக்கரண்டி
- மிளகு – 1/4 தேக்கரண்டி
- தேங்காய்- சிறிதளவு
- புளி தண்ணீர்- சிறிதளவு
ஐயர் வீட்டு முருங்கைக்காய் குழம்பு..! வீட்டு வாசல் வரை மணக்கும்..!
தக்காளி குழம்பு செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். அதில் 1/4 தேக்கரண்டி வெந்தயம், 15 சின்ன வெங்காயம் கட் செய்து சேர்த்து கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். 2 பச்சை மிளகாயை கீறிவிட்டு சேர்த்து கொள்ளவும். அதனுடன் நறுக்கிய 4 தக்காளி, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும். தண்ணீர் சிறிதளவு சேர்த்து வேக விடவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி 1 தேக்கரண்டி உளுத்தப்பருப்பு, 1/2 தேக்கரண்டி கடலை பருப்பு, 10 வெந்தயம், சோம்பு 1/4 தேக்கரண்டி, 1/4 தேக்கரண்டி மிளகு சேர்த்து வதக்கவும். சிவந்த நிறம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஆறியதும் பொடியாக அரைத்து கொள்ளவும். அதில் சிறிதளவு தேங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
வேகின்ற தக்காளியில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லி தூள், சீரக தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து வதக்கி விடவும். அதனுடன் அரைத்து வைத்த கலவையும் சேர்த்து ஊற்றி கலந்து விடவும். சிறிதளவு புளி தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
அவ்ளோ தாங்க சுவையான ஐயர் வீட்டு தக்காளி குழம்பு ரெடி.!
பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்முறை..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |