வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுவையான கடப்பா சட்னி செய்வது எப்படி..?

Updated On: November 12, 2024 11:30 AM
Follow Us:
Kadapa Kara Satni in Tamil 
---Advertisement---
Advertisement

கடப்பா சட்னி செய்வது எப்படி..? | Kadapa Kara Satni in Tamil

நம் வீட்டில் தோசை இட்லி என்று எப்போதும் ஒரே மாதிரியாக சமைப்பது கொஞ்சம் அலுப்பாக இருக்கும். அதனை விட முக்கியாக சொல்லவேண்டும் என்றால் அதற்கு சட்னி செய்வது தான் பெரிது..! தினமும் ஒரே சட்டினியை செய்வது மிகவும் கொடுமையான விஷயம். எப்போதும் ஒரே சட்னி ஒரே இட்லி என்று செய்வது கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் சட்னியை மட்டும் வித்தியாசமாக செய்தால் நல்லா இருக்கும். சரி வாங்க இன்றைக்கு சூப்பராக கடப்பா ஸ்டைல் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!

Kadapa Kara Satni in Tamil:

  • பூண்டு – 5
  • மிளகாய் – 7
  • புளி – எலுமிச்சை பழம் அளவு
  • சின்ன வெங்காயம் – 10 
  • கடுகு – சிறிதளவு
  • தக்காளி –
  • கருவேப்பிலை  – 1 கொத்து

இட்லி, தோசைக்கு சரியான சட்னின்னு அது இதாங்க..! சொல்லும் போதே ஆசையா இருக்கு வாங்க செஞ்சு சாப்பிட்டு பார்ப்போம்..!

செய்முறை:

  • முதலில் மிக்சி ஜாரில் 5 பல் பூண்டு, மிளகாய் 7 எடுத்துக் கொள்ளவும். அதில் புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும். அதனுடன் 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • அடுத்து வெறும் தக்காளியை மட்டும் 1 எடுத்து அதனை மட்டும் அரைத்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயை வைத்து அதில் 1 கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு கடுகு போட்டு பொரிந்தவுடன் அதில் கருவேப்பிலை போடவும். அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள மிளகாயை சேர்த்து வதக்கவும்.
  • அதன் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அப்போது தான் சட்னி நன்றாக இருக்கும்.
  • இந்த சட்னி கொஞ்சம் தண்ணீர் போல் இருந்தால் தான் நல்லா இருக்கும். ஆகவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு அதன் பின் சட்னியை சூடாக தோசை மற்றும் இட்லிக்கு சேர்த்து சாப்பிடுங்கள்..! சும்மா சுவை அள்ளும்..!
  • சுவையான சுரைக்காய் சட்னி செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Chicken Dum Biryani in Tamil

ஓண‌ம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil