கடுகு சட்னி செய்முறை – Kadugu Chutney Recipe in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் இன்று நாம் ஒரு அருமையான சட்னி ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது பொதுவாக நமது வீட்டில் எப்போதுமே ஒரே மாதிரியான சட்டினியை மட்டுமே இட்லி தோசைக்கு சைடிஷாக அரைத்து தருவார்கள். ஆனால் நாம் இன்று தெரிந்துகொள்ள இருக்கு சட்னி முற்றிலும் வேறு. அதாவது எனது உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.. அவர்கள் வீட்டில் இட்லிக்கு சைடிஷாக கடுகை பயன்படுத்தி ஒரு அருமையான சட்னி செஞ்சிருந்தாங்க.. அதை சாப்பிட்டுப்பார்த்த போது சுவை மிகவும் அருமையாக இருந்தது.. சரியென்று நானும் எங்க வீட்டில் ட்ரை செய்து பார்த்தேன்.. எங்க வீட்டுல இருக்குறவுங்களுக்கும் சுவை மிகவும் பிடித்துவிட்டது. இப்போல்லாம் எங்க வீட்டுல வாரத்துல ஒரு முறையாவது இந்த கடுகு சட்னியை செய்துவிடுகிறோம்.. உங்களுக்கு கடுகு சட்னி செய்யணும்னு ஆசை வந்துடுச்சா அப்படின்னா இந்த பதிவை முழுமையாக படித்து செய்முறை விளக்கத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கடுகு – 2 ஸ்பூன்
- மிளகாய் – 5
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- தேங்காய் – 3 ஸ்பூன்
- புளி துருவல் – சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு – தேவையான அளவு
இதையும் கிளிக் செய்யுங்கள் 👉 வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி? |
கடுகு சட்னி செய்வது எப்படி?
அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும் அவற்றில், பின் அவற்றில் எண்ணெய் ஊற்றாமல் இரண்டு ஸ்பூன் கடுகு சேர்த்து மிதமான சூட்டில் கருகிவிடாமல் பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதே வாணலியில் காரத்திற்கேற்ப 5 வரமிளகாய், கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் மிக்ஷி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் வதக்கிய கடுகு, மிளகாய், கருவேப்பிலை, புளி, தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பவுலி மாற்றிக்கொள்ளுங்கள்.
பிறகு கடுகு, கருவேப்பிலை தாளித்து இந்த கடுகு சட்னியில் சேர்த்து ஒரு முறை கலந்துவிடுங்கள் அவ்வளவு தான் சுவையான கடுகு சட்னி தயார். ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
தொடர்புடைய பதிவுகள் |
இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் தமிழில்..! |
தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி? |
கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து பாருங்க..! |
வித்தியாசமான மிளகு கார சட்னி செய்யலாம் வாங்க..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |