Kaikari Vadai Seivathu Eppadi
ஹலோ நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் சத்தான காய்கறிகளை வைத்து மிகவும் சுவையான வடை செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் இதுவரை மெது வடை, மசால் வடை என்று சாப்பிட்டு இருப்போம். ஆனால் காய்கறிகளை வைத்து வடை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..? அந்த வகையில் சத்தான காய்கறிகளை வைத்து சுட சுட வடை சூப்பராக செய்யலாம் வாங்க..!
வெங்காயம் வைத்து மிகவும் சுவையான வடை இப்படி செஞ்சி பாருங்க..! |
காய்கறி வடை செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- துவரம்பருப்பு – 1/2 கப்
- கடலைப் பருப்பு – 1/2 கப்
- இஞ்சி – 1 துண்டு
- காய்ந்த மிளகாய் – 4
- சோம்பு – 1 ஸ்பூன்
- வெங்காயம் – 2
- நறுக்கிய முட்டைக்கோஸ் – 1 கப்
- கேரட் – 3
- நறுக்கிய பீன்ஸ் – 1 கப்
- பச்சை மிளகாய் – 2
- கருவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
பீட்ரூட் வடை இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் |
காய்கறி வடை செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி 3 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
ஸ்டேப் -2
பின் இரண்டும் நன்றாக ஊறியதும் அதை மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -3
பின் அரைத்த மாவுடன் நறுக்கிய முட்டைகோஸ், துருவிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இவற்றுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
ஸ்டேப் -4
எல்லாவற்றையும் நன்றாக பிசைந்த பின் வடை போல தட்டி கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வடையை போட்டு பொறிக்க வேண்டும். வடை பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து பரிமாற வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே..! சத்தான காய்கறி வடை தயார்..! ஆரோக்கியம் நிறைந்த இந்த வடையை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்..!
10 நிமிடத்தில் பருப்பு வடை மாதிரி ஒரு வடை ஆனால் இதன் சுவை வேறமாதிரி |
நாவிற்கு சுவையூட்டும் காலிஃபிளவர் வடை |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |