கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி.? | Instant Kulambu
குளிர்காலத்தில் கார சாரமாக சாப்பிட தான் ஆசையாக இருக்கும். அதற்காக ஒரே மாதிரி வத்த குழம்பு, புளிக்குழம்பு, பூண்டு குழம்பு என்று சாப்பிட்டு சலித்து போய் விட்டது என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த குழம்பு வைப்பதற்கு காய்கறி தேவையில்லை, வெறும் கருவேப்பிலை, கொத்தமல்லி மட்டும் போதும். வாங்க இந்தக் குழம்பு எப்படி வைப்பது என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
கறிவேப்பிலை குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள்:
- கறிவேப்பிலை – ஒரு கையளவு
- கொத்தமல்லி -ஒரு கையளவு
- மிளகு –1/4 தேக்கரண்டி
- பூண்டு பல் –10
- இஞ்சி – சிறிய துண்டு
- நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி
- புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
- மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
குழம்பு செய்முறை:
ஸ்டேப் -1
ஒரு மிக்சி ஜாரில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
ஸ்டேப் -2
அடித்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து 5 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து இரண்டும் பொரிந்து வர வேண்டும். பின் கருவேப்பிலை சிறிதளவு, காய்ந்த மிளகாய் ஒன்று அதனுடன் 20 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப் -3
பூண்டின் நிறம் மாறியதும் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் மிளகாய் தூள் 1 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு புளி தண்ணீர் சிறிதளவு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஸ்டேப் -4
எண்ணெய் பிரிந்த நிலை வந்ததும் சிறிதளவு வெள்ளம், 1 தேக்கரண்டி நல்லெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும். அவ்ளோ தாங்க சுடசுட சாதத்துடன் இந்த குழம்பை ஊற்றி சாப்பிடுங்கள்.!
கருவேப்பிலை இயற்கையாகவே கண் பார்வைக்கு நல்லது ஆனால் அதை யாரும் சாப்பிட மாட்டார்கள், கீழே தான் போடுவோம். இந்த மாதிரி குழம்பு செய்து கொடுத்தால் வேணாம் என்றே சொல்ல மாட்டார்கள். இன்றே ட்ரை பண்ணி பாருங்கள் நண்பர்களே..!
இதையும் செய்து பாருங்கள் ⇒ ருசியான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி.?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |