எத்தனையோ தொக்கு சாப்பிட்டு இருப்பீங்க ஆன இந்த மாதிரி தொக்கு சாப்பிட்டு இருக்கீங்களா..!

Advertisement

கத்திரிக்காய் தொக்கு

உங்கள் வீட்டில் எத்தனையோ தொக்கு சாப்பிட்டு இருப்பீங்க. தக்காளி தொக்கு, வெங்காயம் தொக்கு, கறிவேப்பிலை தொக்கு மற்றும் இஞ்சி தொக்கு இது போன்ற பலவகையான தொக்கு வகைகள் சாப்பிட்டு இருப்பீர்கள். ஒரே மாதிரியான தொக்குகளை சாப்பிட்டு இருக்கும் உங்களுக்கு கொஞ்சம் ரெசிபியாக இருப்பதற்கு இன்றைய பதிவு உங்களுக்கு உதவியானதாக இருக்கும். இன்றைய பதிவில் சுவையான கத்திரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம். சரி வாங்க கத்திரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்த்து உங்களுடைய வீட்டிலும் செய்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ ருசியான தக்காளி கொத்சு செய்ய தெரியுமா.?

கத்திரிக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:

 1. கத்திரிக்காய்- 4
 2. சின்ன வெங்காயம்- 20 
 3. பெரிய வெங்காயம்- 1
 4. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன் 
 5. மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
 6. மல்லி தூள்- 1 ஸ்பூன் 
 7. மிளகாய் தூள்- 2 ஸ்பூன் 
 8. வேர்க்கடலை- 1/4 கப் 
 9. தக்காளி- 2
 10. புளி தண்ணீர்- 1 ஸ்பூன் 
 11. கடுகு- சிறிதளவு 
 12. சோம்பு- 1/2 ஸ்பூன் 
 13. காய்ந்த மிளகாய்- 2
 14. கறிவேப்பிலை- சிறிதளவு
 15. எண்ணெய்- தேவையான அளவு 
 16. உப்பு- தேவையான அளவு

கத்திரிக்காய் தொக்கு செய்முறை:

கத்திரிக்காய் தொக்கு

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் பெரிய வெங்காயத்தை சிறிய துண்டுகளாகவும் மற்றும் கத்திரிக்காயை நீளமாகவும் நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு தக்காளியை நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை பொன் நிறமாக வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

அதே போல வேர்க்கடலை மற்றும் சின்ன வெங்காயத்தை தனித்தனியாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு பிறகு வேறு ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை காய விடுங்கள்.

ஸ்டேப்- 4

எண்ணெய் காய்ந்ததும் எடுத்துவைத்துள்ள கடுகு, சோம்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை அனைத்தையும் போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

5 நிமிடம் கழித்து வதக்கிய பொருட்களுடன் எடுத்துவைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தக்காளி பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 6

10 நிமிடம் கழித்து பாருங்கள் அடுப்பில் உள்ள பொருட்கள் நன்றாக கொதித்து எண்ணெய் மட்டும் தனியாக பிரிந்து இருக்கும். இப்போது 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து வதக்கி வைத்துள்ள கத்திரிக்காய், வேர்க்கடலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து கிண்டி விடுங்கள்.

ஸ்டேப்- 7

இப்போது தொக்குடன் 1 ஸ்பூன் புளி தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைய்யுங்கள். அவ்வளவு தான் நீங்கள் எதிர்பார்த்த கத்திரிக்காய் தொக்கு ரெடி.

இந்த தொக்கை இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி போன்ற அனைத்து ரெபிகளுக்கும் சைடிஷாக சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்⇒ கத்திரிக்காய் தொக்கு செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement