கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க

kerala style chicken curry recipe in tamil

Kerala Style Chicken Curry Recipe in Tamil

சிக்கனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்து கொடுத்தாலும் அல்லது மூன்று வேலையும் செய்து கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் விரும்பி சாப்பிடும் சிக்கனை ஒரே மாதிரி செய்து கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் ருசியாகவும் இருக்கும். அதனால் இந்த பதிவில் கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl

கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

 1. சிக்கன்-1/2 கிலோ
 2. வெங்காயம்-
 3. தாக்களி-2
 4. பச்சை மிளகாய்-3
 5. இஞ்சி- ஒரு துண்டு
 6. பூண்டு-10
 7. எண்ணெய்-50 
 8. பட்டை-1
 9. கிராம்பு-5
 10. ஏலக்காய்-2
 11. மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
 12. மல்லி தூள்- 3 தேக்கரண்டி
 13. தேங்காய்- 1 கப்
 14. பெருஞ்சீரகம் –1 தேக்கரண்டி
 15. மிளகு- 1 தேக்கரண்டி
 16. கருவேப்பிலை- சிறிதளவு

கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்முறை:

கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு

வெங்காயம் தக்காளி நறுக்கவும்:

முதலில் குல்மாபு வைப்பதற்கான காய்கறிகளை நிற்கி கொள்ளலாம். அதற்கு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டு கழுவி விட்டு கட் செய்து கொள்ளவும். பாதி தேங்காய் மூடி திருகி வைத்து கொள்ளவும்.

வீடே மணக்க கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா செய்ய தெரியுமா..?

கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு

மசாலா செய்வது:

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அதில் பட்டை, கிராம்பு,ஏலக்காய் மிளகு, மற்றும் திருகி வைத்த தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும். அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும். காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து திக்கி கொள்ளவும். வதக்கிய பொருட்கள் ஆறியதும் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.

நறுக்கி வைத்த இஞ்சி மற்றும் பூண்டை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு

மசாலா சேர்ப்பது:

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் பெருஞ்சீரகம் சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும் இஞ்சி போலந்து பேஸ்ட், பச்சை மிளகாய், தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளியின் தோல் சுருங்கி வந்ததும், அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்து கலந்து விடவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். ஓர் கொத்தி வந்த பிறகு கழுவி வைத்த சிக்கனை சேர்த்து வேக விடவும்.

கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு

சிக்கன் குழம்பு ரெடி.!

சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்த நிலை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெடி.! ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்.

1/2 kg சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal