Leftover Idli Recipes
ஹலோ நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் மிகவும் சுவையான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக நமக்கும் சரி நம் வீட்டில் இருப்பவர்களுக்கும் சரி எப்பொழுதும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். இன்னும் சிலருக்கு இட்லி மீந்து போய்விட்டதே என்ற கவலை இருக்கும். ஆனால் இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். மீந்து போன இட்லியில் கூட ஒரு சுவையான ரெசிபி செய்து சாப்பிடலாம். அது என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Leftover Idli Recipes in Tamil:
- இட்லி
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 1
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மல்லி தூள் – 1 ஸ்பூன்
- சோயா சாஸ் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
இதுவரை உங்கள் வீட்டில் செய்யாத இந்த பூரியை செய்து பாருங்கள் |
இட்லி எடுத்து கொள்ளவும்:
உங்கள் வீட்டில் மீந்துபோன இட்லியை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இட்லி பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்துள்ள இட்லியை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைக்கவும்:
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின் அதில் 1/2 ஸ்பூன் சீரகம், கருவேப்பிலை,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும். பின் அதில் பொடிபொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் அதில் மிகளாய் தூள், மல்லி தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் நாம் பொறித்து எடுத்து வைத்துள்ள இட்லியை சேர்த்து 2 நிமிடம் வரை கலந்துவிட வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே..! இதுபோல நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள். மீந்துபோன இட்லி மிஞ்சவே மிஞ்சாது..!
5 நிமிடத்தில் செய்ய கூடிய ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |