மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி? | Mangai Oorugai Seivathu Eppadi

மாங்காய் ஊறுகாய் போடுவது எப்படி?

Mango Pickle in Tamil: மாங்காய் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாக சாப்பாட்டிற்கு Side Dish இல்லையென்றால் நம் அனைவருக்கும் நியாபகம் வருவது ஊறுகாய் தான். அதுவும் மாங்காய் ஊறுகாய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். கடைகளில் விற்கும் பாட்டில் ஊறுகாயில் சுவை அதிகரிப்பதற்காக சுவையூட்டிகள் சேர்ப்பார்கள். அது உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். சுவையான மற்றும் ருசியான மாங்காய் ஊறுகாய் வீட்டிலையே எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கலாம்.

மாங்காய் சாதம் செய்வது எப்படி

Mango Pickle Ingredients List in Tamil – தேவையான பொருட்கள்:

maangai oorugai seiyum murai

 1. குண்டு மாங்காய் – தேவையான அளவு
 2. மிளகாய் தூள் – தேவையான அளவு.
 3. வெந்தயம்: 1 டீஸ்பூன் வெந்தயம் (அரைத்தது)
 4. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
 5. நல்லெண்ணெய் – 150 Ml
 6. கடுகு – 1/2 ஸ்பூன்
 7. பெருங்காயதூள் – 1/2 ஸ்பூன்
 8. உப்பு – 1 டீஸ்பூன்

மாங்காய் ஊறுகாய் செய்முறை – Mango Pickle Recipe in Tamil

மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி – ஸ்டேப் 1:

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

 • மாங்காய் ஊறுகாய் செய்வதற்கு தேவையான அளவு குண்டு மாங்காய்களை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
 • பிறகு நறுக்கி வைத்த மாங்காய் துண்டுகளில் சால்ட் உப்பு அரை டீஸ்பூன் சேர்த்து ஒரு 6 மணி நேரம் ஈரப்பதம் இல்லாமல் காயவைக்க வேண்டும்.

மாங்காய் ஊறுகாய் போடுவது எப்படி – ஸ்டேப் 2:

 • பிறகு சிவப்பு மிளகாய் காயவைத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும் அல்லது தனி மிளகாய் தூளும் பயன்படுத்தலாம். அரைத்த மிளகாய் தூளினை தனியாக எடுத்துவைத்து கொள்ளவும். பிறகு 1 டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து அதனை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
 • எந்த பாத்திரத்தில் மாங்காய் துண்டுகளை எடுக்குறீர்களோ அதே பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள மிளகாய் தூளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Mangai Oorugai Seivathu Eppadi – ஸ்டேப் 3:

 • பின் ஒரு பாத்திரத்தில் காயவைத்த மாங்காய் துண்டுகளுடன் தேவையான அளவு அரைத்து வைத்த மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுங்கள்.
 • பின் 1 டீஸ்பூன் அளவு உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும். அதனுடன் அரைத்து வைத்த வெந்தயமும் சேர்த்து நன்றாக Mix செய்து கொள்ளவும்.
சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..?

 

மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி தமிழ் – ஸ்டேப் 4:

 • பிறகு ஒரு வானலியில் 150 ml அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
 • எண்ணெய் சூடான பிறகு அரை ஸ்பூன் அளவு கடுகு மற்றும் 1 ஸ்பூன் அளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும்.

மாங்காய் ஊறுகாய் போடுவது எப்படி தமிழ் – ஸ்டேப் 5:

 • பிறகு Mix செய்து வைத்த மாங்காய் துண்டுகளுடன் கடாயில் தாளித்து வைத்துள்ளதை சேர்த்து நன்றாக கிளறி விடவும். உப்பு, காரம் சரியாக உள்ளதா என்று பார்த்து கொள்ளுங்கள்.
 • இல்லையென்றால் தேவையான அளவு உப்பு, காரம் சேர்த்து கொள்ளலாம். பின் அதனை ஊறவைக்க வேண்டும்.

Mangai Oorugai Seivathu Eppadi Tamil – ஸ்டேப் 6:

 • ஊறவைத்த மாங்காய் துண்டுகளை 3 நாள் வெயிலில் காயவைக்க வேண்டும். வெயிலில் காய வைக்கும் போது மேலே துணி போட்டு மூடிய பிறகு காய வைக்க வேண்டும்.
 • மூன்று நாள் கழித்து பார்த்தால் ஒரு ருசியான, சுவையான மாங்காய் ஊறுகாய் தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்