தோசைக்கல்லில் மசாலா இட்லி செய்வது எப்படி? வாங்க அதையும் செய்து பார்ப்போம்

Advertisement

தோசைக்கல்லில் மசாலா இட்லி செய்வது எப்படி?

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம் இன்று தோசைக்கல்லில் மசாலா இட்லி செய்வது என்பதை பார்க்க போகிறோம். பொதுவாக சமையல் ராணிகளுக்கும் புது புது சமையல்கலை செய்து அசத்தவேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். தினமும் ஒவ்வொரு முறையையும் செய்து வருவீர்கள் அந்த வகையில் இன்று மசாலா இட்லி  தோசைக்கல்லில் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம் அது எப்படி தோசைக்கல்லில் இட்லி ஊத்த முடியும் அதுவும் மசாலா இட்லி ஊத்த முடியும் என்று அனைவருக்கும் யோசனை இருக்கும் வாங்க அதுவும் எப்படி இருக்கும் என்று படித்து பார்த்து தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:

ஸ்பாட் இட்லி செய்முறை

  • நறுக்கிய வெங்காயம் -1
  • பொடியாக நறுக்கிய தக்காளி -2
  • கொத்தமல்லி -சிறிதளவு
  • பச்சை மிளகாய் -2
  • மிளகாய் தூள் -1 ஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
  • மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
  • சோம்பு தூள் – 1/2 ஸ்பூன்
  • புளிக்காத – இட்லி மாவு
  • உப்பு – தேவையான அளவு
  • வெண்ணெய் – வதக்க தேவையான அளவு
முட்டைகோஸ் இருந்தா போதும்.. ரோட்டுக்கடை காளான் நீங்களே செய்யலாம்..!

ஸ்பாட் இட்லி செய்முறை:

ஸ்டேப் -1

Hyderabad spot idli recipe in tamil

முதலில் தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப் -2

வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் வதக்கிய பின் அதில் சிறிது சிறிதாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும் பின்

ஸ்டேப் -3

Hyderabad spot idli recipe in tamil

மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா 1/2 ஸ்பூன், மிளகு தூள் 1/2 ஸ்பூன், சோம்பு தூள் 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப் -4

வதக்கிய பின் அந்த மசாலாவை இட்லி போன்று தனித்தனியாக பிரித்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -5

 Hyderabad spot idli recipe in tamil

அதன் மீது அரைத்து வைத்த இட்லி மாவை கையில் எடுத்து ஊற்றவேண்டும். ஊறிய பின் அதன் மீது வீட்டிலில் இருக்கும் இட்லி பொடியை போட்டு மிதமான சூட்டில் வேகவைக்கவேண்டும் சிறிது வெந்த பிறகு திருப்பி போடவேண்டும். கடைசியாக அதன் மீது வெண்ணெய் சிறிது ஊற்றி எடுத்துக்கொண்டு அதில் தேங்காய் சட்னி சேர்த்து சுவைக்க ஐயோ சுவை அருமையாக இருக்கும். இது மிகவும் ஈஸியான டிஸ் செய்து பாருங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement