மிளகு குழம்பு செய்வது எப்படி.?
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் மிளகு குழம்பு வைப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம். எந்த உணவில் மிளகை சேர்த்தாலும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இப்படி குழம்பு வைத்து கொடுத்தால் வேணாம் என்றே சொல்ல மாட்டார்கள். மிளகை சாப்பிடுவதனால் செரிமான பிரச்சனையை சரி செய்து வாயு பிரச்சனையிலிருந்து விடுபட செய்கிறது. நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதுமட்டுமில்லாமல் நெஞ்சு சளி, இருமல், தொண்டை வலி பிரச்சனையிலிருந்து சரி செய்ய உதவுகிறது. இவ்வளவு நற்குணங்கள் நிறைந்த மிளகை சும்மா சாப்பிட முடியாது. அதனால் தான் இந்த மாதிரி குழம்பு வைத்து கொடுத்தால் வேணும் வேணும் என்று சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் ⇒ வித்தியாசமான மிளகு கார சட்னி செய்யலாம் வாங்க..!
மிளகு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- மிளகு 1தேக்கரண்டி
- வெந்தயம்- 10
- காய்ந்த மிளகாய்- 2
- மல்லி -1 தேக்கரண்டி
- துவரப்பருப்பு-1 தேக்கரண்டி
- உளுந்து- 1 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை
- சின்ன வெங்காயம்- 5
- கடுகு- தாளிப்புக்கு தேவையான அளவு
- வெந்தயம் – தாளிப்புக்கு தேவையான அளவு
- உளுந்து- தாளிப்புக்கு தேவையான அளவு
- பூண்டு – தாளிப்புக்கு தேவையான அளவு
- பெருங்காய தூள் -சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- புளி தண்ணீர் -தேவையான அளவு
மசாலா செய்யும் முறை:
முதலில் கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றவும். அதில் மிளகு 1தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு, காய்ந்த மிளகாய், மல்லி 1தேக்கரண்டி, துவரப்பருப்பு 1தேக்கரண்டி, உளுந்து 1தேக்கரண்டி, சீரகம் 1தேக்கரண்டி, கறிவேப்பிலை சேர்த்து சிவந்த நேரம் வரும் வரை வதக்கவும். ஆறியதும் வதக்கியதை அரைக்கவும். அவ்ளோ தான் மசாலா ரெடி..!
குழம்பு வைக்கும் முறை:
ஸ்டேப்: 1
முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் கடாயை வைக்க வேண்டும். அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும். பின் தாளிப்புக்கு தேவையான கடுகு, வெந்தயம் உளுந்து, காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப்: 2
பிறகு சிவந்த நிறம் வந்தவுடன் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். பின் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
ஸ்டேப்: 3
பிறகு புளி தண்ணீர் ஊற்றவும். நல்லா கொதிக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து குழம்பு கெட்டியான பதம் வந்தவுடன் அடுப்பை அனைத்து விட வேண்டும்.
ஸ்டேப்: 4
அவ்ளோ தாங்க உடலுக்கு ஆரோக்கியமான மிளகு குழம்பு ரெடி..! ருசிக்கலாம் வாங்க.. இந்த குழம்பை இரண்டு நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம் வீணா போகாது.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |