தீபாவளிக்கு மிகவும் ருசியான மோத்திசூர் லட்டு செஞ்சு பாருங்கள்..!

motichoor ladoo recipe in tamil

மோத்திசூர் லட்டு செய்வது எப்படி..?

வணக்கம் நேயர்களே..! இன்று நாம் பார்க்கப்போகும் ஒரு ரெசிபி என்னவென்றால் பேக்கரில் செய்யக்கூடிய மோத்திசூர் லட்டு செய்வது எப்படி..? என்பதை பற்றித்தான். மோத்திசூர் என்றால் குட்டி முத்துக்கள் என்று அர்த்தம். பொதுவாக இந்த வகை லட்டு பார்ப்பதற்கு அழகாகவும், சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் இருக்கும்.  அப்படிப்பட்ட இந்த லட்டுவை செய்வது எப்படி.? என்பதை இந்த பதிவில்  பார்க்கலாம்.

லட்டு செய்ய தேவையான பொருட்கள் :

முதலில் மோத்திசூர் லட்டு செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. கடலைப்பருப்பு – 1 1/2 கப் 
  2. சர்க்கரை – 1 1/2 கப்
  3. கேசரி பவுடர் – 1/4 டீஸ்பூன் 
  4. ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் 
  5. நெய் – 2 டேபிள்ஸ்பூன் 
  6. முந்திரி – 2 டேபிள்ஸ்பூன் 
  7. உலர்திராட்சை -2 டேபிள்ஸ்பூன் 
  8. தண்ணீர் – தேவையான அளவு 
  9. எண்ணெய் – தேவையான அளவு 

லட்டு செய்முறை :

 motichoor ladoo seivathu yepadi

ஸ்டேப்-1:

முதலில் நாம் எடுத்துவைத்திருக்கும் 1 1/2 கப் கடலைப்பருப்பை 2-3 முறை தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தப்படுத்துங்கள்.  இதனை 2 மணிநேரம் ஊறவைக்கவும் பின்னர் கடலைப்பருப்பு ஊறிய தண்ணீரை நன்கு வடிகட்டிய பிறகு அதனை ஒரு மிச்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஸ்டேப்-2:

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றவும். அதில் நாம் அரைத்து வைத்திருந்த கடலைப்பருப்பை சிறிய சிறிய பக்கோடா போல போட்டு வறுத்துக்கொள்ளவும். முக்கியமாக அந்த பக்கோடா ரொம்பவும் பொன்னிறமாக மாறிவிடாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்-3:

பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 1/2 கப் சர்க்கரையை சேர்த்து இதனுடன் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும். இதனுடன் 1/4 டீஸ்பூன் கேசரி பவுடர் மற்றும் 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

ஸ்டேப்-4:

பின்னர் இதனுடன் நாம் முன்பு அரைத்து வைத்திருந்த கடலைபருப்பு பக்கோடா பொடியையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும் இதனை நன்கு லட்டு உருட்டும் பக்குவம் வரும்வரை வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

ஸ்டேப்-5:

அந்த கலவை வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் முந்திரி மற்றும் 2 டேபிள்ஸ்பூன் உலர்திராட்சையை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பின்பு இதனை நமது அந்த லட்டு மாவில் போட்டு அதனை நன்கு கலந்துவிடவும் பின்னர் இந்த லட்டு மாவு சூடு ஆறியவுடன் அதனை லட்டுவாக உருட்டிக்கொள்ளவும்.

மிகவும் சுவையான மோத்திசூர் லட்டு ரெட்டி வாங்க சுவைக்கலாம்..! நீங்களும் இந்த லட்டுவை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இதையும் பாருங்கள் => தீபாவளிக்கு இந்த மாதிரி நெய் மைசூர் பாக் செஞ்சு சாப்பிட்டு பாருங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal