மலேசியா ஸ்டையில் சிக்கன் முர்தபா | Chicken murtabak recipe..!
Chicken murtabak recipe:- சிக்கன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவே இன்று நாம் சிக்கனை பயன்படுத்தி முற்றிலும் வித்தியாசமான சிக்கன் ரெசிபி ஒன்று தயார் செய்ய போகிறோம். அதாவது மலேசியாவில் மிகவும் ஃபேமஸ் ஆன சிக்கன் முர்தபா நம் வீட்டில் மிக எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த சிக்கன் முர்தபாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க மலேசியா ஸ்டையில் சிக்கன் முர்தபா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:-
மாவு பிசைவதற்கு தேவைப்படும் பொருட்கள்:-
- மைதா மாவு – 2 கப் (250 கிராம்)
- உப்பு – தேவையான அளவு
- முட்டை – 1
- வெண்ணெய் – 2 ஸ்பூன்
- பால் – 1/4 கப்
மசாலா செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்:
- சிக்கன் – 200 கிராம்
- பெரிய வெங்காயம் – 2 நீளவாக்கில் பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்
- கேரட் – 1 (துருவி கொள்ளுங்கள்)
- பச்சை மிளகாய் – 1 (பொடிதாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- முட்டை – மூன்று
பெப்பர் சிக்கன் செய்வது எப்படி..! |
Chicken murtabak recipe – செய்முறை:-
ஸ்டேப்: 1
முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 250 கிராம் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, 2 ஸ்பூன் வெண்ணெய் மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பிசைய வேண்டும்.
பின் 1/4 கப் வெது வெதுப்பான பாலை ஊற்றி பிசைய வேண்டும்.
மாவில் பால், வெண்ணெய், முட்டை போன்றவற்றை சேர்த்து பிசைந்து இருப்பதினால் தண்ணீர் அதிகமாக தேவைப்படாது, எனவே தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மைதாவை பிசைந்து கொள்ளுங்கள்.
பின் பிசைந்த மாவின் மீது சிறிதளவு எண்ணெயை தடவி மாவினை மூடி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
மைதா மாவு ஊறுவதற்குள் நாம் மைதா மாவில் ஸ்டப்பிங் செய்வதற்கு மசாலாவை தயார் செய்யலாம் வாங்க.
அதற்கு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும், எண்ணெய சூடேற்றியதும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள், வெங்காயம் ஓரளவு வதங்கிய பின் துருவி வைத்துள்ள கேரட்டினை சேர்த்து வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 3
பின் 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 4
பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பொடிதாக நறுக்கி வைத்துள்ள 1 பச்சை மிளகாவை சேர்த்து ஒரு முறை கிளறிவிட வேண்டும்.
ஸ்டேப்: 5
பின்பு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மிளகு தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து மசாலாவை நன்றாக வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 6
பின் 100 கிராம் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் ஜாரில் சேர்த்து 2 நிமிடங்கள் அரைதேடுத்துக்கொள்ளுங்கள்.
ஹோட்டல் ஸ்டைல் எக் ரைஸ் செய்வது எப்படி? |
ஸ்டேப்: 7
இவ்வாறு அரைத்த சிக்கினை மசாலாவில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அரைத்த சிக்கன் என்பதால் வேக அதிகநேரம் ஆகாது எனவே மசாலாக்கள் சிக்கனில் நன்றாக சேர்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, 5 நிமிடங்கள் வரை சிக்கனை வேகவைக்கவும்.
இப்பொழுது ஸ்டப்பிங் செய்ய மசாலா தயார் 5 நிமிடம் கழித்த பின் சிக்கனை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்கவும்.
ஸ்டேப்: 8
மசாலா நன்கு ஆறியதும், ஒரு பவுலில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளுங்கள். பின் அவற்றில் மசாலாவை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
ஸ்டேப்: 9
பின் பிசைந்து வைத்துள்ள மைதா மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பரோடாவிற்கு மாவு தேய்ப்பது போல் ஓட்டைகள் இல்லாமல் நன்கு மெலிதாக தேய்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 10
மெலிதாக தேய்த்த மைதா மாவில் நடுவில் தயார் செய்து வைத்துள்ள சிக்கன் மசாலாவை 2 ஸ்பூன் வைத்து மைதா மாவினை நான்கு புறத்தையும் மடிக்க வேண்டும்.
இவ்வாறு மற்ற உருண்டைகளையும் தயார் செய்ய வேண்டும்.
ஸ்டேப்: 11
பின் ஒரு சுத்தமான பவுலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்து கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பேன் வைத்து அவற்றில் எண்ணெய் தடவி சூடேற்றவும்.
ஸ்டேப்: 12
நான்ஸ்டிக் பேன் நன்கு சூடேறியதும் ஸ்டப்பிங் செய்து வைத்துள்ள மைதா மாவினை பேனில் போட வேண்டும். பின் அடித்து வைத்துள்ள முட்டையினை மைதா மாவின் மீது லேசாக தடவி விடுங்கள்.
ஸ்டேப்: 13
மாவு ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்தவுடன், மறுபக்கத்தை பிரட்டி சிறிதளவு அடித்து வைத்துள்ள முட்டையினை தடவி பொன்னிறமாக வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள். இவ்வாறு மற்ற மாவுகளை வேகவைத்து எடுக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான மலேசியா ஸ்டையில் சிக்கன் முர்தபா தயார் மிகவும் சுவையாக இருக்கும், டின்னருக்கு செய்து அசத்தலாம், இதை சாப்பிட சைடிஷ் எதுவும் தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |