சப்பாத்திக்கு இப்படி ஒருமுறை Mushroom Gravy செய்து சுவைத்து பாருங்கள்..!

 Mushroom Gravy Recipe in Tamil

Mushroom Gravy Recipe in Tamil

தினமும் சப்பாத்திக்கு ஒரே மாதிரியான கிரேவி செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுவையான சமையல் குறிப்பு பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் மிகவும் ருசியான ஒரு ரெசிபியை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

அது என்ன ரெசிபி என்றால் சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற காளான் கிரேவி செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Mushroom Gravy Recipe for Chapathi in Tamil:

Mushroom Gravy Recipe for Chapathi in Tamil

 

முதலில் இந்த காளான் கிரேவிக்கு தேவையான பொருட்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 1. காளான் – 1 கப் 
 2. தக்காளி – 2
 3. வெங்காயம் – 3
 4. பட்டை – 1
 5. கிராம்பு – 5
 6. ஏலக்காய் – 3
 7. கசகசா – 1 டீஸ்பூன் 
 8. தயிர் – 1/2 கப் 
 9. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
 10. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 11. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்  
 12. முந்திரி பருப்பு – 10
 13. கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு 
 14. தேங்காய் துருவல் – 1/2 கப் 
 15. உப்பு – தேவையான அளவு  
 16. எண்ணெய் – தேவையான அளவு 
 17. தண்ணீர் – தேவையான அளவு   

செய்முறை:

ஸ்டேப் – 1:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள  1 கப் காளான் நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள். அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 2 தக்காளி, 3 வெங்காயம் மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2:

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் நாம் நறுக்கி வைத்துள்ள 2 தக்காளி, 3 வெங்காயம், 1 பட்டை, 5 கிராம்பு, 3 ஏலக்காய், 1 டீஸ்பூன் கசகசா மற்றும் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ரோட்டுக்கடை காளான் இனி வீட்டிலேயே செய்யலாம்

ஸ்டேப் – 3:

அதனுடனே 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 10 முந்திரி பருப்பு மற்றும் 1/2 கப் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4:

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி? முழு விவரம்..!

ஸ்டேப் – 5:

Mushroom gravy recipe for rice in tamil

பிறகு அதனுடனே நாம் முன்னரே சுத்தம் செய்து வைத்துள்ள 1 கப் காளான், 1/2 கப் தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பிறகு அதன் மீது நாம் பொடியாக நறுக்கி வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது ருசியான காளான் கிரேவி தயாராகி விட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த காளான் கிரேவியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil