பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்ன சமையல் என்று கேட்கும் அளவிற்கு அசத்தலான குருமா இது தான்..!

Advertisement

காளான் குருமா செய்வது எப்படி | Mushroom Kurma in Tamil

எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்திக்கு சட்னி சாம்பார் என்று செய்து சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். எவ்வளவு வித்தியாசமாக செய்தாலும் அது அலுத்து போயிருக்கும். என்னதான் அப்புறம் தொட்டுகை செய்வது என்று குழப்பாக இருக்கும். அதனால் தான் இந்த பதிவின் வாயிலாக அருமையாக குருமா செய்ய போகிறோம்.

அனைவருக்கும் காளான் பிடிக்கும். அதனை கடையில் வாங்கி சாப்பிட தான் ஆர்வமாக இருப்போம். ஏனென்றால் அது சமைக்க தெரியாது என்று நினைப்போம். ஆனால் அது செய்வது மிகவும் எளிது என்ன குருமா என்று சொல்லிவிட்டு காளான் பற்றி பேசுறேன் என்று நினைப்பீர்கள். இன்று குருமா செய்ய போகிறதே காளானை வைத்து தான்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

காளான் குருமா செய்வது எப்படி?

 mushroom korma recipe vegetarian in tamil

செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் குருமாவிற்கு ஒரு பேஸ்ட் ரெடி பண்ணிப்போம். ஒரு கப் தேங்காய் துருவல், 2 டேபிள் ஸ்பூன் கசகசா, 1 ஸ்பூன் சோம்பு, சின்ன பட்டை, கிராம்பு, 1 ஏலக்காய் 1, மிளகு 10 கடைசியாக 8 முந்திரி பருப்பு அவ்வளவு தான். இது அனைத்தையும் சேர்த்து மிக்சி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

செய்து பாருங்கள் 👉👉 கறி இல்லை காய் இல்லை ரோட்டுக்கடை பரோட்டா குருமா டேஸ்ட் சும்மா அள்ளும்..!

ஸ்டேப்: 2

அடுத்து கடாயை அடுப்பில் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் பிரியாணி இலை 1, கிராம்பு 2, ஏலக்காய் 1, பட்டை அது கூடவே 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து ஒரு முறை கலந்து விடவும்.

ஸ்டேப்: 3

 mushroom korma recipe vegetarian in tamil

1 பெரிய அளவில் உள்ள வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்த்துக் கொள்வோம். அதன் கூடவே 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 பச்சை மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து கொஞ்சம் நேரம் வெங்காயம் வதங்கட்டும்.

அதன் பின் அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா, 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துவிட்டு, அதன் பின் 1 தக்காளியை, சேர்த்து அதை நன்கு வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

அதன் பின் தான் நாம் காளான் சேர்க்க வேண்டும். இப்போது அனைத்தும் 5 நிமிடம் அப்படியே வேகவிடவும், இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது.

இதையும் Try பண்ணுக 👉👉 காய்கறிகள் இல்லாமல் சுவையான குருமா செய்யலாம்.!

ஸ்டேப்: 5

5 நிமிடத்திற்கு பிறகு 1/2 கப் பச்சை பட்டாணி சேர்த்து கலந்து விடவும். பின்பு நாம் அரைத்து வைத்த தேங்காயையும் அதில் சேர்த்து கலந்துவிட வேண்டும். இப்போது அனைத்தையும் கொதிக்கவிட தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு கொதிக்கவிடவும்.

15 நிமிடம் அப்படியே வேகவிடவும். அதன் பின்பு திறந்து கொத்தமல்லி இலை சேர்த்து இறங்கிவிடவும்.

குறிப்பு: இதில் பச்சை பட்டாணி உங்களுக்கு வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம், இல்லையென்றால் வேறு காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம். கரம் மசாலாவிற்கு பதிலாக சிக்கன் மட்டன் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.

இதை செய்து சாப்பிடுங்கள் 👉👉 உங்கள் வீட்டில் சப்பாத்தியா? மறந்துவிட்டு எப்போது போல் குருமாவை வைக்காதிங்க இதை ட்ரை பண்ணுங்க

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement