செட்டிநாடு முட்டை குழம்பு மிகவும் சுவையாக செய்யும் முறை

Advertisement

முட்டை குழம்பு | Muttai Kulambu inTamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் சமையல் பதவில் செட்டிநாடு முட்டை குழம்பு மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று தான் தெரிந்துகொள்ளபோகிறோம். பொதுவாக நம் வீட்டில் முட்டை அடை குழம்பு, முட்டை உடைத்து ஊத்திய  குழம்பு என்று சாப்பிட்டு இருந்திருப்போம். ஆனால் இந்த முட்டை குழம்பை ஒரு முறை செய்தால் போதும் திரும்ப திரும்ப சாப்பிட வேண்டும் என்று தோன்றும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது போல மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு வைப்பது எப்படி?

செட்டிநாடு முட்டை குழம்பு செய்வது எப்படி.?

  • முட்டை – 4 அல்லது 5
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1
  •  இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  •  தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  •  மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  •  உப்பு – சுவைக்கேற்ப தேவையான அளவு 
  •  எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  •  மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருள்கள்:

  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • துருவிய தேங்காய் – 1 கப் 
  • காஷ்மீரி வரமிளகாய் -5
  •  மிளகு – 1 டீஸ்பூன்
  •  சீரகம் – 1 டீஸ்பூன்
  •  சோம்பு – 1 டீஸ்பூன்

செட்டிநாடு முட்டை குழம்பு செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் உங்களுக்கு தேவையான முட்டைகளை எடுத்துக்கொண்டு அதை வேக வைத்து  ஓடுகளை நீக்கி விட்டு தனியாக வைக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு கடாயை வைக்கவும். கடாய் சூடானதும் அதில் எண்ணெய் சேர்க்க  வேண்டும்.

ஸ்டேப்: 2

எண்ணெய் சூடானதும் சீரகம், சோம்பு போட்டு தாளிக்க வேண்டும்.  அதன் பிறகு துருவிய தேங்காய் மற்றும் வரமிளகாயை, மிளகு போன்றவற்றை  வறுத்து கொண்டு அதை ஆறவைக்க  வேண்டும். ஆறவைத்த பிறகு அதை  மிக்சி ஜாரில் அரைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 3

பின்பு அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதன் பிறகு வேகவைத்த முட்டையை கத்தியால் கீற வேண்டும். கீறுவதினால் குழம்பு அதில் சேர்வதினால் சுவையாக இருக்கும். கீறிய முட்டைகளை சிறிது நேரம் அதில் வதக்கி  தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

ஸ்டேப்: 4

மறுபடியும் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து  சீரகம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம், இஞ்சி  பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு தக்காளியை அரைத்து கொண்டு அந்த கடாயில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

ஸ்டேப்: 5

அதன் பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்த்து கலந்து விட வேண்டும். குழம்புக்கு தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து விட வேண்டும். கலந்த பிறகு மூடியை போட்டு மூட வேண்டும்.

ஸ்டேப்: 6

மசாலா நன்றாக வெந்த பிறகு கீறி வைத்த முட்டையை பொறுமையாக குழம்பில் வைக்க வேண்டும். உங்களுக்கு குழம்பு கெட்டியாக வேண்டும் என்றால் கெட்டி பதம் வரும் வரை குழம்பை கொதிக்க விட வேண்டும். அதில் சிறிது எலுமிச்சை சாறை  பிழிந்து விட வேண்டும். இப்பொழுது சுவையான செட்டிநாடு  குழம்பு ரெடி வாங்க  சுவைக்கலாம்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement