வெங்காய பாயாசம்
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்று நாம் பார்க்கப் போகும் ஒரு சமையல் குறிப்பு ஒரு புதுமையானது ஆகும். அது என்னவென்றால் வெங்காயத்தில் பாயாசம் செய்வது எப்படி..! என்பதை பற்றி தான்பார்க்கப்போகிறோம். நாம் அனைவரும் இதுவரை வெங்காயத்தை குழம்பு, கூட்டு, பொரியல், ரசம் போன்றவற்றிக்கு மட்டும் தான் பயன்படுத்தியிருப்போம். ஆனால் இந்த வெங்காயத்தை வைத்து பாயாசமும் செய்யலாம். அது எப்படி என்பதை இன்றைய பதிவில் வாயிலாக பார்க்கலாம் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
கத்திரிக்காய் கிரேவி இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!
தேவையான பொருட்கள்:
முதலில் வெங்காய பாயாசம் செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம்.
- வெங்காயம் – 3 பெரியது
- தேங்காய்துருவல் – 1 கப்
- நெய் – 2 டீஸ்பூன்
- பால் (காய்ச்சியது) – 1/2 லிட்டர்
- நாட்டுசர்க்கரை – 1 கப்
- ஏலக்காய்தூள் – 1/4 டீஸ்பூன்
- பாதாம்பருப்பு – 6
- முந்திரிபருப்பு – 6
- உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்திருக்கும் 3 பெரிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்றுமுறை நன்கு கழுவி சுத்தம் செய்துவிடவேண்டும். பின்பு அதனுடன் தண்ணீர் ஊற்றி 20 நிமிடத்திற்கு ஊறவைக்கவேண்டும்.
ஸ்டேப் – 2
பிறகு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் அந்த ஊறிக்கொண்டிருக்கும் வெங்காயத்தை எடுத்து 10 நிமிடத்திற்கு வேகவைக்க வேண்டும். அந்த வெங்காயம் வெந்தவுடன் அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் – 3
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 2 டீஸ்பூன் நெய்யை ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் 6 பாதாம்பருப்பு, 6 முந்திரிப்பருப்பு ஆகியவற்றை இரண்டும் மூன்றுமாக உடைத்து சேர்த்து நன்கு வறுங்கள். அது நன்கு பொன்னிறமாக வறுபட்டதும் அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 1 கப் தேங்காய்த்துருவலை சேர்த்து நன்கு வதக்கவும்.
ஸ்டேப் – 4
இந்த கலவை நன்கு வதங்கியவுடன் அதனுடன் நாம் முன்பு வேகவைத்து எடுத்து வைத்திருந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்துவிடவும். இந்த கலவை நன்கு வெந்தவுடன் அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 லிட்டர் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
ஸ்டேப் – 5
அந்த கலவை நன்கு கொதித்தவுடன் அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் 1 கப் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்துவிடவும். இந்த கலவையுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் 1 சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
நமது சுவையான வெங்காய பாயாசம் ரெடியாகிவிட்டது பிறகு இதனை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி அனைவருக்கு பரிமாறிவிடலாம். நீங்களும் இந்த வெங்காய பாயாசத்தை செய்து சுவைத்து பாருங்கள்..!
முறையான கல்யாண வீட்டு பால் பாயாசம் | Paal Payasam in Tamil
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |