வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெங்காயம் வைத்து மிகவும் சுவையான வடை இப்படி செஞ்சி பாருங்க..!

Updated On: November 22, 2022 1:13 PM
Follow Us:
Onion Vadai Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Onion Vadai Recipe in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் வெங்காயம் மட்டும் வைத்து மிகவும் சுவையான வடை செய்வது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். மாலை நேரத்தில் மிகவும் சுவையான வெங்காய வடை இந்த மாதிரி உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் சுவையான வெங்காய வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

பீட்ரூட் வடை இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

சுவையான வெங்காய வடை செய்வது எப்படி..? 

தேவையான பொருட்கள்: 

  1. பெரிய வெங்காயம் –
  2. பச்சை மிளகாய் – 4
  3. அரிசி மாவு – 1/2 கப்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
  5. கொத்தமல்லி – சிறிதளவு
  6. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  7. சீரகத்தூள் – 1 ஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு
  9. எண்ணெய் – தேவையான அளவு
  10. தண்ணீர் – தேவையான அளவு

இதையும் படியுங்கள்⇒ நாவிற்கு சுவையூட்டும் காலிஃபிளவர் வடை

வெங்காய வடை செய்முறை: 

செய்முறை -1 

முதலில் ஒரு கிண்ணத்தில் 3 வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ள வேண்டும்.

செய்முறை -2

பிறகு அதில் மிளகாய் தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை -3

பின் அதில் 1/2 கப் அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். அதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து வடை மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும்.

செய்முறை -4

பிறகு அதை வடை போல உருட்டி தட்டி கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் நாம் உருட்டி வைத்துள்ள வெங்காய வடையை போட்டு பொறிக்க வேண்டும். வடை பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விட வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே..! மிகவும் சுவையான வெங்காய வடை ரெடி..! நீங்களும் இதுபோல வெங்காயத்தில் வடை செய்து சாப்பிட்டு பாருங்கள்..!

10 நிமிடத்தில் பருப்பு வடை மாதிரி ஒரு வடை ஆனால் இதன் சுவை வேறமாதிரி

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?