Packrey Butter Bun Recipe
பொதுவாக அனைவருக்கும் வீட்டில் சமைத்து கொடுக்கும் சாப்பிட்டினை விட கடையில் சமைக்கும் சாப்பாடு தான் அதிகமாக பிடிக்கிறது. அதிலும் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மற்றும் கேக் இதுபோன்றவற்றை எல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவீர்கள். ஆகையால் உங்களுடைய வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரருக்கும் பிடித்த மாதிரியான பேக்கரி ஸ்டைல் Butter Bun டேஸ்டா செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் Butter Bun டேஸ்டா செய்வது எப்படி என்று விரிவாக பதிவை படித்து தெரிந்துக்கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Butter Buns at Home in Tamil:
அனைவருக்கும் பிடித்த மாதிரி பேக்கரி ஸ்டைல் பட்டர் பன் வீட்டிலேயே செய்வது எப்படி என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பன் செய்ய தேவையான பொருட்கள்:
- பால்- 3/4 கப்
- சர்க்கரை- 4 தேக்கரண்டி
- ஈஸ்ட் பவுடர்- 1 தேக்கரண்டி
- மைதாமாவு- 2 கப்
- பட்டர்- 3 தேக்கரண்டி
- உப்பு- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
கிரீம் தயார் செய்ய தேவையான பொருட்கள்:
- சர்க்கரை- 100 கிராம்
- பட்டர்- 4 தேக்கரண்டி
- காய்ச்சிய பால்- 1 தேக்கரண்டி
பட்டர் பன் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் எடுத்துவைத்துள்ள 3/4 கப் பாலினை அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை சேர்த்து பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து விடுங்கள். பாலை காய்ச்சிய பிறகு சிறிது நேரம் ஆறவைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது பட்டர் பன் செய்வதற்கு முதலில் ஈஸ்ட்டை கலந்து கொள்ள வேண்டும். அதனால் 1 பாத்திரத்தில் ஆறவைத்துள்ள பால், 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஈஸ்ட் பவுடர் 1 தேக்கரண்டி சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து அப்படியே வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்ததாக மாவு பிசைய வேண்டும். அதனால் ஒரு பெரிய அளவிலான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 2 கப் மைதாமாவு, 3 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் உப்பு சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் ஈஸ்ட் கலந்து வைத்துள்ள பாலை ஊற்றி மாவினை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
அதன் பிறகு பிசைந்து வைத்துள்ள மாவுடன் 3 தேக்கரண்டி பட்டர் சேர்த்து மீண்டும் 10 நிமிடம் பிசைந்து கொள்ளுங்கள். இப்போது பிசைந்து வைத்துள்ள மாவின் மீது 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதன் மீது ஒரு காட்டன் துணியை போட்டு மூடி மாவினை 2 மணி நேரம் புளிக்க வைய்யுங்கள்.
ஸ்டேப்- 5
மாவு புளித்த பிறகு அதனை தனித்தனி உருண்டையாக மிதமான அளவில் பிடித்து 1/2 மணிநேரம் அப்படியே வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 6
1/2 மணி நேரம் கழித்த பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை காய விடுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு உருண்டை பிடித்துள்ளதை எண்ணெயில் போட்டு பொன் நிறமாக பொறித்து வைத்து கொள்ளுங்கள். இப்போது பன் தயாராகிவிட்டது.
10 நிமிடத்தில் பாஸ்தா ரெடி அதுவும் சீஸ் பாஸ்தா..! |
கிரீம் தயார் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் எடுத்துவைத்துள்ள 100 கிராம் சர்க்கரையினை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள சர்க்கரை, 4 தேக்கரண்டி பட்டர் மற்றும் 1 தேக்கரண்டி காய்ச்சிய பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இப்போது கிரீம் தயார் ஆகிவிட்டது.
ஸ்டேப்- 3
இப்போது பொறித்து வைத்துள்ள பன்னை இரண்டாக நறுக்கி அதன் நடுவே தயார் செய்து வைத்துள்ள கிரீமை வைத்து சாப்பிடுங்கள். சுவை சும்மா தாறுமாறா இருக்கும்.
இதையும் செய்து சாப்பிடுங்கள் 👉👉👉 பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்ன சமையல் என்று கேட்கும் அளவிற்கு அசத்தலான குருமா இது தான்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |