பாகற்காய் வறுவல்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் பாகற்காய் வறுவல் கசப்பு இல்லாமல் சுவையாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். பொதுவாகவே பாகற்காய் கசப்பாக இருப்பதால் இதை ஒரு சிலர் அதிகம் சாப்பிடமாட்டர்கள். பாகற்காயில் அதிகம் சத்துக்கள் உள்ளன. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மைகள் பாகற்காய்க்கு உள்ளது. இந்த பாகற்கையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு கசப்பில்லாமல் சுவையாக பாகற்காய் வறுவல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
வீட்டில் காலிபிளவரை இப்படி செய்து அசத்துங்கள் அப்படி ஒரு டேஸ்ட் |
தேவையான பொருட்கள்:
- பாகற்காய் -250 கிராம்
- கடலை பருப்பு -1 1/2 ஸ்புன்
- பெரிய வெங்காயம் -1
- தக்காளி – 2
- பூண்டு -10 பல்
- மஞ்சத்தூள் -1/4 ஸ்புன்
- மிளகாய்த்தூள் -2 ஸ்புன்
- கருவேப்பிலை -சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- கடுகு -1/4 ஸ்புன்
- உப்பு -தேவையான அளவு
- எண்ணெய் -தேவையான அளவு
பாகற்காய் வறுவல் செய்முறை:
- பாகற்காய் வறுவல் செய்வதற்கு முன்பு அவை முத்தின பாகற்காயாக இருந்தால் அதனுடைய விதையை நீக்கி விட வேண்டும்.
- அடுத்ததாக அந்த பாகற்காயை மோரில் ஊறவைக்க வேண்டும். இப்படி செய்வதனால் கசப்பு தன்மை போய்விடும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 1
முதலில் ஒரு கடாயை எடுத்து கொண்டு அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவேண்டும். அதன் பிறகு அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்க்க வேண்டும். கடுகு பொறித்த பின்பு 10 பல் பூண்டு சேர்க்க வேண்டும்.
ஸ்டேப்: 2
அடுத்ததாக கடலை பருப்பு சேர்க்கவேண்டும். கடலை பருப்பு பொன்னிறம் வந்தவுடன் கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும்.
ஸ்டேப்: 3
வெங்காயத்தை அதிகமாக வதக்க வேண்டாம். அடுத்ததாக அதில் நறுக்கி வைத்த தக்காளியை சேர்க்கவும். அதில் மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 4
2 நிமிடம் வதக்கிய பிறகு நறுக்கி வைத்த பாகற்காயை சேர்க்கவேண்டும். மசாலாவுடன் பாகற்காய் சேரும் அளவிற்கு நன்றாக வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 5
பாகற்காயை நன்றாக வதக்கிய பிறகு சிறுதளவு தண்ணீர் ஊற்றவும். அதன் பிறகு அதன் மேல் கொத்தமல்லி சேர்த்து கொஞ்சம் நேரம் மூடிவைத்து வேக வைக்கவும்.
ஸ்டேப்: 6
பாகற்காய் வெந்த பிறகு அதில் நல்லெண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவ்வாறு எண்ணெயில் வதக்குவதால் கசப்பு தன்மை குறைந்து விடும். இப்போது சுவையான பாகற்காய் வறுவல் தயார் வாங்க சாப்பிடலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |