சுவையான பன்னீர் புலாவ் செய்வது எப்படி???

Advertisement

பன்னீர் புலாவ் செய்வது எப்படி???

பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும். எந்த வகையில் இன்று பன்னீரை பயன்படுத்தி சுவையான பன்னீர் புலாவ் செய்வது எப்படி என்று இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

சுவையான ரசமலாய் செய்வது எப்படி..! Rasmalai Recipe In Tamil..!

தேவையான பொருட்கள்:

  1. பன்னீர் – 200 கிராம்.
  2. பாஸ்மதி அரிசி – 1 கப்
  3. வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) – 2
  4. சீரகம் – 1/2 தேக்கரண்டி
  5. கேரட் – 1 கப்
  6. பீன்ஸ் – 1 கப்
  7. பச்சை மிளகாய் – 2
  8. கரம் மசாலா – 1 தேக்கரண்டி
  9. எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  10. நெய் – 2 தேக்கரண்டி
  11. புதினா – தேவையான அளவு
  12. கொத்தமல்லி – தேவையான அளவு
  13. பிரியாணி இலை – 1
  14. ஏலக்காய் – 2
  15. கிராம்பு – 3
  16. மிளகு – தேவையான அளவு
  17. இலவங்கப்பட்டை – 2
  18. தண்ணீர் – தேவையான அளவு
  19. உப்பு – தேவையான அளவு.
ஸ்பெஷல் சம்மர் சமையல் செய்யலாம் வாங்க..!

பன்னீர் புலாவ் செய்வது எப்படி??? செய்முறை விளக்கம்..!

பன்னீர் புலாவ் செய்வது எப்படி ஸ்டேப் 1:

இந்த பன்னீர் புலாவ் செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய 200 கிராம்  பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

பன்னீர் புலாவ் செய்வது எப்படி ஸ்டேப் 2:

இப்போது பன்னீர் புலாவ் செய்ய அடுப்பில் ஒரு பிரஷர் குக்கரை வைத்து அவற்றில்  சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் நெய், இரண்டு பட்டை, 3 ஏலக்காய், இரண்டு கிராம்பு, ஒரு பிரியாணி இலை, சிறிதளவு மிளகு, பொடிதாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் 4 கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பன்னீர் புலாவ் செய்வது எப்படி ஸ்டேப் 3:

வெங்காயம் பொன்னிறமானவுடன் அவற்றில் 1/2 கப் நறுக்கிய கேரட், 1/2 கப் நறுக்கிய பீன்ஸ், 1/2 கப் பச்சை பட்டாணி, ஒரு ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்க வேண்டும்.

பன்னீர் புலாவ் செய்வது எப்படி ஸ்டேப் 4:

காய்கறிகள் அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு கையளவு புதினா, ஒரு கையளவு கொத்தமல்லி மற்றும் வறுத்து வைத்துள்ள பன்னீர் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.

பன்னீர் புலாவ் செய்வது எப்படி ஸ்டேப் 5:

பின்பு சுத்தமாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்த ஒரு கப் பாஸ்மதி அரிசியை இவற்றில் சேர்த்து சில நிமிடங்கள் மெதுவாக வதக்கிவிடவும். பின்பு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறிவிட்டு. பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து, பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

இப்பொழுது சுவையான பன்னீர் புலாவ் தயார், அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

சமையல் குறிப்பு:

பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும்.

பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும்.

சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவைசுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவைசுவையான சமையல் குறிப்புகள்
Advertisement