பீர்க்கங்காய் தோல் சட்னி | Peerkangai Satni Seivathu Eppadi
எப்போதும் அனைத்து உணவிற்கும் ஒரே மாதிரியான சட்னி செய்து தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். அனைவருமே கேட்பார்கள் இவ்வளவு நாளாக இது தெரியாமல் தூக்கி போட்டுவிட்டேன் என்று சொல்லி சாப்பிடுவார்கள். அப்படி என்ன சட்னி என்று ஒரே ஆர்வமாக இருப்பீர்கள். அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நாம் Pothunalam.com பதிவின் நிறைய விதமான சட்னி வகைகள் பதிவிட்டு வருகிறோம். அதனை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 👉 Pothunalam.com
பீர்க்கங்காய் தோல் சட்னி:
பீர்க்கங்காய் தோல் சீவி தனியாக எடுத்துக்கொள்ளவும். அடுத்து கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து அதில் 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, 10 சின்ன வெங்காயம், சீவி வைத்துள்ள பீர்க்கக்காய் தோல் சேர்த்து வதங்கட்டும்.
அது ஓரளவு வதங்கியதும், அதன் கூடவே 10 பல் பூண்டு, 2 பச்சைமிளகாய், 3 வரமிளகாய் , புளி சிறிதளவு, கொத்தமல்லி 3 கொத்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும் அதில் 1 கப் அளவு துருவிய தேங்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
மிக்சி ஜாரில் அரைப்பதை விட அம்மி கல்லில் அரைத்தால் டேஸ்ட் சூப்பராக இருக்கும். ஆகவே அதனை ட்ரை பண்ணுங்க இதனை நீங்கள் சாதத்திலும் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி செய்து பாருங்க
ஒரு நிமிடத்தில் இட்லி தோசைக்கு சூப்பரான சட்னி..! வறுத்து அரைக்க வேண்டியதில்லை..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |