பொங்கலுக்கு சுவையான வெண்பொங்கல் கொத்சு இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!

வெண்பொங்கல் கொத்சு

பொதுவாக அனைவரும் எப்போதும் நமது வீட்டில் உள்ளவர்களுக்கு சத்தான மற்றும் சுவையான சாப்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்போம். அதிலும் பெரிய வேலை என்னவென்றால் வித விதமான சாப்பாடாக இருக்க வேண்டும் என்று தான் நம் வீட்டில் இருப்பவர்கள் நினைப்பார்கள். இப்போது பண்டிகை நாட்கள் வரப்போகிறது. பண்டிகை நாட்களில் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், கூட்டு இது போன்ற ஒரே மாதிரியான சாப்பிட்டினை தான் செய்து இருப்பீர்கள். அதனால் இன்றைய பதிவில் சமைக்கும் தாய்மார்களுக்கு சாப்பாட்டு பிரியர்களுக்கும் உதவும் வகையில் சுவையான வெண்பொங்கல் கொத்சு செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு வருகின்ற பொங்கல் அன்று உங்களுடைய வீட்டிலும் செய்து அனைவரும் மகிழ்ச்சியாக இந்த பொங்கலை கொண்டாடலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Pongal Gotsu Recipe in Tamil:

இப்போது வெண்பொங்கலுக்கு சுவையான கொத்சு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதனுடைய செய்முறை பற்றி விரிவாக கீழே படித்து தெரிந்துக்கொள்ளங்கள்.

வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

 1. கடலை பருப்பு- 2 1/2 தேக்கரண்டி 
 2. உளுத்தம் பருப்பு- 1 1/2 தேக்கரண்டி 
 3. தன்யா- 2 தேக்கரண்டி
 4. காய்ந்த மிளகாய்- 8
 5. வெந்தயம்- 1/4 தேக்கரண்டி 
 6. பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி 

கொத்சு செய்ய தேவையான பொருட்கள்:

 • சின்ன வெங்காயம்- 75 கிராம் 
 • தக்காளி- 1
 • கத்திரிக்காய்- 1/4 கிலோ 
 • கடுகு- 1 தேக்கரண்டி 
 • பாசிப்பருப்பு- 100 கிராம் 
 • மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
 • வெல்லம் தூள்- 1 தேக்கரண்டி  
 • புளி- 50 கிராம் 
 • உப்பு- தேவையான அளவு 
 • எண்ணெய்- தேவையான அளவு

இதையும் படியுங்கள்⇒ பொங்கல் ஸ்பெஷல் 9 காய்கறிகள் சேர்த்து சாம்பார் இப்படி வையுங்க..! பொங்கல் காலியாகிடும்.!

கொத்சு செய்முறை:

வெண்பொங்கல் கொத்சு

ஸ்டேப்- 1

முதலில் அடுப்பை பற்றி வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் கடலை பருப்பு 2 1/2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 1/2 தேக்கரண்டி, தன்யா 2 தேக்கரண்டி மற்றும் காய்ந்த மிளகாய் 8 இவை அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் நன்றாக பொன் நிறத்தில் வறுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

5 நிமிடம் கழித்த பிறகு அதனுடன் 1/4 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 1/2 தேக்கரண்டி பெருங்காய தூள் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் வறுத்து சூடு ஆற வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

வறுத்து வைத்துள்ள பொருட்கள் ஆறிய பிறகு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து விடுங்கள். இப்போது கொத்சு செய்வதற்கு மசாலா பவுடர் தயாராகிவிட்டது.

ஸ்டேப்- 4

அடுத்து எடுத்துவைத்துள்ள கத்திரிக்காய், தக்காளி இரண்டையும் நறுக்கி வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு 50 கிராம் புளியை தண்ணீரில் ஊற வைத்து புளி தண்ணீர் கரைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

அதன் பிறகு 100 கிராம் பாசிப்பருப்பை நன்றாக வேக வைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 6

இப்போது அடுப்பை பற்றி வைத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த கடுகுடன் சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் கிண்டி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 7

சிறிது நேரம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கும் பொருட்களுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி, கத்திரிக்காய் மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வேக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 8

கத்திரிக்காய் வெந்த பிறகு அதனுடன் புளி சாறு 1/2 கப் மற்றும் தேவையான அளவு உப்பு, வெல்லம் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து ஒரு 5 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

ஸ்டேப்- 9

5 நிமிடத்திற்கு பிறகு அடுப்பில் இருக்கும் கத்திரிக்காயுடன் வறுத்து அரைத்து வைத்துள்ள பவுடர் 3 தேக்கரண்டி மற்றும் வேக வைத்துள்ள பாசி பருப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடுங்கள்.

கொத்சு கொதித்த பிறகு அதனை கீழே இறக்கி வைத்து விட்டு. இப்போது சுவையான வெண்பொங்கல் கொத்சு தயாராகிவிட்டது.

உங்கள் வீட்டில் பொங்கலுக்கு செய்து இருக்கும் வெண்பொங்கலுடன் இந்த கொத்ஸை தொட்டு சாப்பிடுங்கள். 

இதையும் செய்து பாருங்கள் ⇒ கோவில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி

 

Sakkarai Pongal Recipe in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal